பிரபல நடிகை சாலை விபத்தில் மரணம்..! அதிர்ச்சியில் திரை உலகினர்

பிரபல நடிகையும், பாடகியுமான மஞ்சுஷா மோகந்தாஸ் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பிரபல ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியான ஐடியா ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் வெற்றி பெற்று மலையாள திரையுலகில் பிரபல பாடகியாக திகழ்ந்த மஞ்சுஷா மோகந்தாஸ் (26) சில படங்களில் நடித்துள்ளார்.

இவர் தற்போது காலடி சம்ஸ்கிருத பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு MA பயின்று வருகிறார்.இந்நிலையில் கடந்த வரம் தனது கல்லூரி தோழி அஞ்சனாவுடன் நடன கலை ஆராச்சி தொடர்பாக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.அங்குள்ள MC சாலை அருகே சென்ற பொது மஞ்சுஷா இருசக்கர வாகனத்தில் மீது எதிரில் வந்த கார் மோதியது

.இதில் பலத்த காயமடைந்த மஞ்சுஷா மற்றும் அவர் தோழி ஆகிய இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.பலத்த காயமடைந்த இவர் ஒரு வரமாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மஞ்சுஷா நேற்று உயிரிழந்தார்.உயிரிழந்த மஞ்சுஷாவுக்கு பிரியதர்ஷன் என்ற கணவரும், மகளும் உள்ளனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*