கொடுமையின் உச்சம்! காருக்குள் தவித்த கணவன்… நான்கு பேரால் சீரழிக்கப்பட்ட 8 மாத கர்ப்பிணி

கடந்த 2014-16ம் காலகட்டத்தில் இந்தியாவில் 1,10,333 கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக, மத்திய அரசு கூறியுள்ளது. உலக அளவில் தற்போது அதிக கற்பழிப்பு சம்பவங்களும், முறைகேடான பாலியல் குற்றங்களும் நடைபெறும் நாடாக இந்தியா மாறியுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள், பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதால், சர்வதேச அரங்கில் நன்மதிப்பு குறைய தொடங்கியுள்ளது.

தமிழகம் தொடங்கி காஷ்மீர் வரையிலும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது.மகாராஷ்டிராவில் 8 மாத கர்ப்பிணிப் பெண்ணை நான்கு காமவெறியர்கள் சேர்ந்து சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கணவனும் அவரது 8 மாத கர்ப்பிணி மனைவியும் காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களை வழிமறித்த கொடூரன் ஒருவன், அந்த கர்ப்பிணிப்பெண்ணின் கணவரை தாக்கி காருக்குள் அடைத்து விட்டு, கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் அந்த பெண்ணை தனது கூட்டாளிகளோடு சேர்ந்து சீரழித்துள்ளான்.

அந்த தம்பதியினர் பொலிஸாரிடம் புகார் அளித்ததன் பேரில் அந்த நான்கு பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.அரசு கற்பழிப்பு குற்றவாளிகளை கைது செய்து உடனடியாக மரண தண்டனை விதிக்கும் வரை இவ்வாறான சம்பவங்கள் நடந்து கொண்டே தான் இருக்கும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*