நள்ளிரவில் சச்சின் அப்படி செய்ததை பார்த்து எனக்கு அதிர்ச்சியாக இருந்தது..!!கங்குலி பகிர்ந்த சுவாரசியம்

கிரிக்கெட் உலகின் தனி அகராதி சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்! சச்சின் என்பது, பெயரல்ல, அது ஓர் உணர்வு… உற்சாகம்… உத்வேகம்! ஒட்டுமொத்த இந்தியாவும் ஒரு நிமிடம் எந்த வேலையும் செய்யாமல் `ஸ்டன்னாகி’ நின்றிருக்கிறதா? மதங்கள் கடந்து இந்தியா முழுக்க ஆலயங்களில் ஒற்றை மனிதனுக்காக பிரார்த்தனைகள் நடத்தப்பட்டிருக்கின்றனவா?  பங்கு வர்த்தகம் சில நிமிடம் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறதா?

பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் ஸ்தம்பித்திருக்கின்றனவா? கூட்டம் கூட்டமாக மக்கள் தெருக்களில் டி.வி-யின் முன்னால் நின்றதால் டிராஃபிக் ஜாம் ஆகியிருக்கிறதா? இது அத்தனையும் சச்சின் என்னும் ஒற்றை மனிதனுக்காக நடந்திருக்கின்றன.இப்படி ஒரு தனி ஆளுமை கொண்ட ஒரு நபர் சச்சின்.

இந்நிலையில் கங்குலி சச்சினை பற்றி ஒரு சுவாரசிய பதிவை பகிர்ந்துள்ளார்.அதில் நள்ளிரவில் சச்சின் செய்த காரியத்தை கண்டு முதல் நாள் சாதாரணமாக இருந்ததாகவும் இரண்டாவது நாள் பயந்ததாகவும் அதன்பிறகுதான் உண்மை தெரியவந்ததாகவும் தெரிவித்துள்ள கங்குலி,

சச்சின் டெண்டுல்கரும் சவுரவ் கங்குலியும் இந்திய அணியின் வெற்றிகரமான தொடக்க ஜோடி. இவர்கள் இருவரும் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்துள்ளனர். மேலும் பார்ட்னர்ஷிப் ஸ்கோர் சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளனர். கிரிக்கெட்டில் தொடக்க வீரர்களாக களமிறங்கும் வீரர்கள், களத்திற்கு அப்பாற்பட்டு தனிப்பட்ட முறையிலும் நெருங்கி பழகுவார்கள்.

சச்சினும் கங்குலியும் கூட அப்படித்தான். சச்சினும் கங்குலியும் இணைந்து எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்துள்ளனர். இடது-வலது கை தொடக்க ஜோடியில் மிகவும் வெற்றிகரமான ஜோடி கங்குலி-சச்சின் ஜோடி.

இந்நிலையில், சச்சின் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்றை கங்குலி பகிர்ந்துள்ளார். தான் அணிக்கு வந்த புதிதில், சச்சினுடன் நடந்த சம்பவம் குறித்து கங்குலி பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக பேசிய கங்குலி, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது, நானும் சச்சினும் ஒரு அறையில் தங்கினோம். அப்போது, நள்ளிரவில் ஒரு முறை எதார்த்தமாக முழித்து பார்த்தால், சச்சின் அறைக்குள் நடந்துகொண்டிருந்தார். பாத்ரூமுக்கு செல்கிறார் என்று நினைத்து மீண்டும் தூங்கிவிட்டேன்.

மறுநாள் இரவும் பார்த்தால், அதேபோல் நடந்துகொண்டிருந்தார். நள்ளிரவு ஒரு மணி இருக்கும். இந்நேரத்தில் ஏன் நடந்துகொண்டிருக்கிறார்? என்ன செய்கிறார் என பார்த்தேன். நடந்தார், பின்னர் நாற்காலியில் உட்கார்ந்தார். அதன்பின் தூங்கிவிட்டார். இதுதொடர்பாக அவரிடம் கேட்டே ஆகவேண்டும் என்று நினைத்து, அவரிடம் கேட்டேன். அப்போதுதான், தனக்கு தூக்கத்தில் நடக்கும் பழக்கம் இருப்பதை சச்சின் தெரிவித்தார் என கங்குலி கூறியுள்ளார்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*