உடைந்து போன திருமண வாழ்வின் பின்னர் டிடிக்கு சிக்கிய ரகசிய காதலன்! டிடியின் புது காதலன் இவர்தானாம்..!! அவரே வெளியிட்ட வீடியோ!

பிரபல சின்னத்திரை நட்சத்திர தொகுப்பாளினி டிடி என்று செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. காபி வித் டிடி மூலம் புகழ்பெற்றவர்.பிரமாண்ட நட்சத்திர கலை விழாக்கள், விருது வழங்கும் விழாக்களை தொகுத்து வழங்கியவர். முன்னணி திரை நட்சத்திரங்களுக்கு தோழியாக இருப்பவர்.கடந்த 2014ம் ஆண்டு டிடி தனது பால்ய காலத்து நண்பரும், காதலருமான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை திருமணம் செய்து கொண்டார்.

தமிழ் திரையுலகமே திரண்டு வந்து வாழ்த்திச் சென்றது. திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக டிடி சினிமாவில் நடிப்பதை அவர் கணவர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்கள் கடந்தாண்டு விவாகரத்து பெற்றனர்.

இந்நிலையில் சமீபகாலமாக திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இந்நிலையில் இவரது ரகசிய காதலன் என்று ஒரு தகவல் இணையத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அந்த ரகசிய காதலன் யார் என்றால் பகல்நிலவு தொடரில் நடித்து வருகிற மிதுன்ராஜ் தானாம்.ஆனால் அதை மறுத்துள்ள மிதுன், ‘நான் அவரை அக்கா என்று தான் கூப்பிடுவேன், அவருடன் நான் எடுத்து கொண்ட ஒரு செல்ஃபியை ஃபேஸ்புக்கில் போட்டேன். அதை எடுத்து ஒரு யூடியுப் சேனல் இவ்வாறு பரவ விட்டுள்ளது’ என தனது பேட்டியில் விளக்கியுள்ளார்.