பிக்பாஸில் இன்று வெளியேறப்போவது யார் தெரியுமா… குறும்படம் மூலம் வெளியான பாலாஜியின் தில்லு முல்லு..

பிக் பாஸ் இந்த வார நாமினேஷனில் பாலாஜி, பொன்னம்பலம், மஹத், ரித்விகா,மும்தாஜ், ஷாரிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.இதில் நேற்றைய தினத்தில் ரித்விகா மக்களால் காப்பாற்றப்பட்டுள்ளார். அதன்பின்பு இன்று வெளியேறப்போகும் போட்டியாளர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.தற்போதய நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் நபர்களில் ரித்விகா மற்றும் ஷாரிக்கை தவிர்த்து மீதமுள்ள 4 பேரும் ஏற்கனவே நாமினேஷனில் இருந்தவர்கள் தான்.

இதில் ரித்விகா நேற்றைய தினத்தில் காப்பாற்றப்பட்டுள்ளார்மேலும்பொன்னம்பலம், பாலாஜி, மும்தாஜ் ஆகியோர் பல முறை நாமினேஷனில் வந்து பின்னர் மக்களால் காப்பாற்றபட்டனர். இதனால் இந்த வாரமும் காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்றைய தினத்தில் பாலாஜியின் உண்ணாவிரதம் உண்மைதானா என்பதை மிகத் தெளிவாக குறும்படம் மூலம் மக்களுக்கும் போட்டியாளருக்கும் காட்டியுள்ளார் பிக்பாஸ்..இந்த வாரத்தில் ஷாரிக் இருப்பதிலேயே குறைவான வாக்குகள் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மஹத் அடுத்த இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இன்று வெளியான ப்ரோமோவில் ஐஸ்வர்யா,யாஷிகா,மும்தாஜ் ஆகியோர் கண்கலங்கியுள்ளனர். இதைவைத்து பார்க்கையில் ஷாரிக் வெளியேறுகிறாரா என்ற சந்தேகமும் வருகிறது.ஆனால் உண்மையில் நிகழ்ச்சியில் இருந்து யார் வெளியேறுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.