முடி கொட்டுதா இனி கவலைய விடுங்க..!! ஷாம்புக்கு பதிலா இதை தேய்ச்சாலே முடி தாறுமாறா வளருமாம்..!!!

முகம் எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் தலை முடி தான் ஒருவரின் அழகை முழுமை ஆக்குகிறது. தலைமுடி உதிர்தல், இளநரை, பேன், பொடுகு, புழு வெட்டு, என பலவிதமான பிரச்னைகள் தலை முடியில் வரும். வயது வித்தியாசம் இல்லாமல் , ஆண் பெண் வேறுபாடு இல்லாமல் இதுபோன்ற தலை முடி பிரச்னைகள் வரும். உணவு பழக்கவழக்கம், சுற்றுப்புற சூழ்நிலைகள், பராமரிப்பு இல்லாதது தான் இதற்கு காரணம்.

தினமும் தலைக்கு எண்ணெய் தேய்கிறேன், ஆனாலும் எனக்கு முடி உதிர்கிறது, பேன், பொடுகு இருக்கிறது என்பதும், இருபது வயது தான் ஆகிறது முடி நரைத்து விட்டது என்பதும் பலரின் தினசரி புலம்பல்களில் ஒன்று. எல்லாருக்கும் கடலை மாவு என்றாலே முகம் பளபளக்கும் சருமத்திற்கும் தான் என்று தெரியும். ஆனால் இந்த கடலை மாவை கொண்டு தலைமுடி வளர்ச்சியை தூண்டலாம்.

பயன்கள்
சரும அழகைப் போலவே தலைமுடி பராமரிப்பிலும் கடலைமாவு பல்வேறு வகைகளில் நமக்குப் பயன்படுகிறது. பண்டைய காலத்தில் இருந்து கடலை மாவு அழகு பராமரிப்புக்கு என்றே பயன்பட்டு வருகிறது.

இதிலுள்ள போஷாக்குகள் உங்கள் கூந்தலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. வலிமையான மற்றும் அடர்த்தியான பொலிவான கூந்தலை பரிசாக அளிக்கிறது.

முடி வளர்ச்சி,முடி உதிர்தலை தடுத்தல்,கூந்தலை சுத்தமாக்குதல்,கூந்தல் வறட்சியை போக்குதல்,கூந்தலிலுள்ள சிக்கலை போக்குதல்,இயற்கையான கண்டிஷனர்,பொடுகை தவிர்த்தல்,பொலிவான மற்றும் நீண்ட கூந்தலை அளித்தல்,கூந்தல் நுனிப்பிளவை தடுத்தல்,ஆகிய பிரச்சினைகளுக்கு கடலை மாவு மூலம் உங்களுக்குத் தீர்வு கிடைக்கும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*