கருணாநிதியால் அப்பா சிவாஜியிடம் பலமுறை அடி வாங்கிய நடிகர் பிரபு… எதற்காக தெரியுமா.

கருணாநிதி என்று அவரின் பெயரை கூறினால் அப்பா எங்களை தலையில் அடிப்பார் என்று நடிகர் பிரபு தெரிவித்துள்ளார்.மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. ராஜாஜி அரங்கம் உள்ள பகுதி மக்களின் கண்ணீர், கதறலால் சோகமாக காட்சியளிக்கிறது.நடிகர் பிரபு தனது குடும்பத்தாருடன் வந்து கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

கருணாநிதி பற்றி அவர் கூறியதாவது,என் அப்பாவுக்கும், அவருக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்தது. அவரை கருணாநிதி என்று பெயரை சொன்னால் அப்பா உடனே எங்களின் தலையில் அடிப்பார். அதனால் அவரை நாங்கள் எப்பொழுதுமே பெரியப்பா என்றே அழைத்து வந்தோம்.என் தந்தையின் திருமணத்தின்போது பெரியப்பா தான் மாப்பிள்ளைத் தோழனாக இருந்தார்.

திருமணத்தன்று எடுக்கப்பட்ட புகைப்படத்தை நாங்கள் பொக்கிஷமாக வைத்துள்ளோம். அந்த புகைப்படத்தில் பெரியப்பா, எம்.ஜி.ஆர். சார், கண்ணதாசன் சார், தயாரிப்பாளர் பெருமாள் முதலியார் ஆகியோர் உள்ளனர்.

பெரியப்பாவுடனான நாட்கள் குறித்து அப்பா அடிக்கடி பேசுவார். அரசியல் விஷயத்தில் மாற்றுக் கருத்து இருந்தாலும் எங்கள் அன்பு மாறாது என்று பெரியப்பாவும் கூறுவார்.

எப்படி சிவாஜி அப்பாவை மிஸ் பண்ணுகிறோமோ அதே போன்று கலைஞர் பெரியப்பாவையும் மிஸ் பண்ணுவோம். அப்பாவும், பெரியப்பாவும் நம்முடன் தான் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். தமிழ் வாழும் வரை அவரின் நினைவும் வாழும்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*