கருணாநிதியின் தலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள அந்த பொருள் என்ன. ரணமான மக்கள் மனம்..

கருணாநிதியின் தலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள அந்த பொருள்..!?! – ரணமான மக்கள் மனம்திமுக தலைவர், முன்னாள் தமிழக முதல்வர் திரு.மு.கருணாநிதி அவர்கள் நேற்று (7-8-2018) மாலை 06:10 மணிக்கு உடல்நல குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.இந்த தகவல் நாடு முழுதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய 45வது வயதில் முதலமைச்சாராக பொறுபேற்ற அவர் தொடர்ந்து 50 ஆண்டுகாலம் தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் ஒரு சட்ட மன்ற உறுப்பினராக வெற்றியை மட்டுமே பெற்று வந்துள்ளார்.

இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஆகஸ்ட் 10-ம் தேதி 1942-ம் வருடம் முரசொலி என்ற பத்திரிக்கையை தொடங்குகிறார் கலைஞர் கருணாநிதி. அப்போது, கலைஞர் கருணாநிதியின் வயது 18.தான் தொடங்கிய பத்திரிகையில் தன்னுடைய மரணச்செய்தி இன்று வந்துள்ளது. இதனை பார்க்க அவரால் முடியவில்லை.

அதனால், அவர் உடல் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி பெட்டிக்குள் அவரது தலைக்கு அருகில் இன்றைய முரசொலி பத்திரிக்கையை வைத்துள்ளனர்.

மேலும், அந்த பத்திரிக்கையுடனேயே அவரது உடல் புதைக்கப்படும் என்றும் கூறுகிறார்கள். இந்த தகவல் திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மனதில் பெரும் ரணத்தை கொடுத்துள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*