காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…!! இதுவரை யாரும் செய்திராத சுவாரசியமான திருமணம்

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் கிரண்குமார். அவரும் அஞ்சனா என்ற பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த விஷயத்தை அஞ்சனா தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதற்கு அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதற்கு காரணம் கிரண்குமார் ஆதிவாசி சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் தான்.ஆகவே வீட்டிலிருந்து வெளியேறினார் அஞ்சனா.

இதனிடையே தனது மகளை கிரண் கடத்திவிட்டதாக அஞ்சனாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த ஜோடி ஒரு காரியம் செய்துள்ளனர்.அவர்களின் திருமணத்தை யாரும் தடுக்க முடியாத வகையில் தங்களுடைய திருமணத்தை பேஸ்புக்கில் லைவ் மூலம் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் கிரண்குமார்-அஞ்சனா தங்களது திருமணத்தை பேஸ்புக் லைவ் வீடியோவாக வெளியிட்டனர். மேலும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

யாரும் நினைத்து பார்க்காத வகையில் திருமணத்தை செய்துள்ள இந்த காதல் ஜோடியின் திருமணத்திற்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இணையத்தில் வைரலாகிவரும் அவர்களது திருமண புகைப்படம் இதோ

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*