வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் கேரள மக்கள்..! பதற வைக்கும் காணொளி

கேரளாவில் கடந்த புதன்கிழமை முதல் பெய்துவரும் கன மழையினால் கேரளாவில் வயநாடு, கண்ணூர், ஆலப்புழா, இடுக்கி, கோழிக்கோடு, மலப்புரம், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.வெள்ளநீர் வெளியே செல்ல வழியில்லாததால் ஆங்காங்கே சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தன்னூரில் மழை வெள்ளத்தால் வீடுக்கள் அடித்து செல்லப்பட்டன. காற்றாற்று வெள்ளத்தில்மான்கள் கூட்டம் கூட்டமாக அடித்து செல்லப்படுகிறது.கொச்சி விமானநிலையத்தில் விமான ஓடுபாதையில் நீர் புகுந்ததால் மோட்டார் பம்ப் மூலம் நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது.

வெள்ளம் சூழ்ந்த பகுதியில் உள்ள மக்களை மீட்புக்குழுவினர் படகுமூலம் மீட்டு வருகின்றனர். ஹெலிகாப்டர் மூலமும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு திறப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பலமாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.கேரள மாநிலம் முழுவதும் வரலாறு காணாத அளவில் மழையால் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது.பலர் மீட்டுப்பு பணியாளர் மூலம் மீட்டக்கப்பட்டு வரும் நிலையில்

சிலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கோர சம்பவங்களும் நடந்துக்கொண்டு இருக்கிறது..குறித்த காணொளியில் மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லும் சம்பவம் காண்போரின் நெஞ்சை பதற வைத்துள்ளது.வைரலாகும் அந்த வீடியோ பதிவ இதோ

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*