கேரளா வெள்ளம்! வீடு முழுவதும் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட நடிகை…! உருக்கமான வீடியோ

சுமார் 26 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக இடுக்கி அணை திறக்கப்பட்டதால், அம்மாநிலத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் மழை பெய்து வருவதால் கேரளா மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதுகேரளா வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட தருணம் குறித்து உருக்கமாக பேசியுள்ளார் நடிகை அனன்யா.கனமழையால் கடவுளின் தேசமான கேரளா 100 ஆண்டுகளில் இல்லாத அளவு மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது.

இதுவரையிலும் பலியான நபர்களின் எண்ணிக்கை மட்டும் 324ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பலரும் மொட்டை மாடியிலும், கூரையிலும் தஞ்சமடைந்துள்ளனர்.அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பிரபல நடிகையான அனன்யா, தான் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது குறித்து உருக்கமாக பேசி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில், கடந்த இரண்டு நாட்களாக நாங்கள் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல, அது மிகவும் மோசமான அனுபவம்.எங்கள் வீடு முழுவதும் தண்ணீரில் மூழ்கிவிட்டது, நாங்கள் இப்போது நடிகை ஆஷா சரத் வீட்டில் இருக்கிறோம்.

எல்லாமே கடவுளின் கையில் தான் இருக்கிறது, என்னை போன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் உதவ வேண்டும், எங்களை மீட்டவர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*