தொகுப்பாளினி டிடியிடம் மனம் திறந்த நயன்தாரா..? காதல் தோல்வியில் நடிகர் சிவகார்த்திகேயன்

நயன்தாரா, யோகி பாபு, ஜாக்குலின் உள்ளிட்டப் பலர் நடித்துள்ள படம் கோலமாவு கோகிலா. டீசர் வெளியானது முதலே இந்தப் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. இந்தப் படத்தை நெல்சன் இயக்க, அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே வெளியான இப்படத்தின் பாடல்கள் ட்ரெண்டிங் ஆக, படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது.இந்நிலையில் கடந்த வாரம் திரைக்கு வந்து செம்ம ஹிட் அடித்துள்ளது என்ன அதற்குள் ஹிட் என்கிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம்.ஆம், இப்படத்தை தமிழகத்தில் விற்றதே ரூ 8 கோடி வரை தான் இருக்கும் என கூறப்படுகின்றது,

ஆனால், இரண்டே நாட்களில் ரூ 4 கோடி வரை இப்படத்திற்கு ஷேர் கிடைத்துவிட்டது. அதனால், கண்டிப்பாக இப்படம் ஹிட் தான்,இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக பல நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் பங்கேற்று வருகிறார்கள்.இதன் ஒரு பங்காக பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் இந்த வாரம் நயன்தார கலந்து கொண்டுள்ளார்.

இதன்போது, பல்வேறு சுவாரஸ்யமான கேள்விகள் கேட்கப்பட்டது. அது மட்டும் இன்றி, கோலமாவு கோகிலா திரைப்படக் குழுவினரும் இதில் பங்குப்பற்றியிருந்தனர்.

கலகலப்பான இந்நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் காதல் தோல்வி பாடல் ஒன்றை இருவரிகளில் பாடிக்காட்டியுள்ளார்.அந்த வீடியோ பதிவு இதோ

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*