கார் டிரைவருடன் நடிகைக்கு கள்ளக்காதல்..!! தந்தைக்கு தெரிந்ததால் ஏற்பட்ட விபரீதம்

கார் டிரைவருடன் மகளுக்கு ஏற்பட்ட கள்ளக்காதலை அவமானமாக நினைத்த தந்தை, கூலிப்படை ஏவி கள்ளக்காதலனை கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. ஐதராபாத்தைச் சேர்ந்த இந்த தொழில் அதிபருக்கு கொடைக்கானலில் சொகுசு பங்களா மற்றும் தோட்டம் உள்ளன. இவருடைய மகள் விஷ்ணுபிரியா நடிகை ஆவார். இவர், மாயாவி திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான இவர், கொடைக்கானல் பங்களாவையும், தோட்டத்தையும் பார்வையிட அவ்வப்போது கொடைக்கானல் செல்லும்போது டாக்ஸி டிரைவர் பிரபாகரனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

காரில் வரும்போது பேசிப் பழகியதன் மூலம் இது கள்ளக்காதலாக மாறியது. பிரபாகரனுக்கு ரூ.15 லட்சத்துக்கு கார் வாங்கிக்கொடுத்தார் விஷ்ணுபிரியா. மேலும், பிரபாகரனை மறுமணம் செய்துகொள்ள முடிவுசெய்தார்.இத்தனை செல்வாக்கோடு வாழ்ந்து வரும் தனக்கு ஒரு கார் டிரைவரால் நிம்மதி பறிபோனது என்று ஆத்திரமடைந்த தந்தை பிரபாகரனை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.அதன்படி, கூலிப்படையினர் மணிகண்டன், முகம்மது சல்மான், முகமது இர்பான் ஆகியோரோடு சேர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை பிரபாகரனைக் கொலை செய்து, பள்ளத்தாக்கில் சடலத்தை வீசியுள்ளார்.

பிரபாகரனின் கார் கொடைக்கானல் உகார்தே பகுதியில், கடந்த 24-ம் தேதி, அங்கங்கே ரத்தச் சிதறல்களோடு அனாதையாக நின்றது.24 மணி நேரத்தில் துப்புத் துலக்கி, கூலிப்படையினரை வளைத்துப் பிடித்து பொலிசாரின் விசாரணையில், செந்தில்குமார் உள்ளிட்ட கூலிப்படையினர், காரில் வைத்துப் பிரபாகரனைக் கொலை செய்துவிட்டு.

8 கி.மீ. தூரம் தள்ளியுள்ள செண்பகனூர் பள்ளத்தாக்குப் பகுதியில் பிணத்தை எறிந்ததை ஒப்புக்கொண்டனர். கூலிப்படையினர் அனைவரும் கைதுசெய்யப்பட்ட நிலையில், தலைமறைவாகிவிட்ட தொழிலதிபர் சூரியநாராயணனை பொலிசார் தேடி வருகிறார்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*