திருமணம் முடிக்காமல் கமலுடன் வாழ்ந்த நடிகை! தற்கொலைக்கு முயற்சி செய்தாரா? தொடரும் சோகமான வாழ்க்கை

நடிகை சரிகா தாகூரின் வாழ்க்கை பல்வேறு சோகத்தை சுமந்து சோதனைகளுடன் சென்று கொண்டிருக்கிறது.நடிகர் கமல்ஹாசனுக்கு வாணி கணபதி என்ற மனைவி இருந்தபோது, நடிகை சரிகா தாகூரை காதலித்தார். இதனால், கமலின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது.தன் வாழ்வில் வலிகளை மட்டுமே கண்டு வந்த சரிகாவின் வாழ்வில் கமலின் காதலும், உறவும் வாழ்வின் மற்றொரு பக்கத்தை காண்பித்தது.நடிகர் கமல்ஹாசனை போன்று நடிகை சரிகாவும் சிறு வயதிலேயே திரைத்துறையில் காலடி பதித்தவர். ஆனால் இருவரும் வெவ்வேறு சூழ்நிலைகளில் வளர்ந்தவர்கள்.

சரிகா தனது சிறுவயதில் நடிக்க ஆரம்பித்தபோது அவரின் வருமானத்தை நம்பியே அவரது குடும்பம் இருந்தது, படிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்ட அவரால் தொடர்ந்து தனது படிப்பினை தொடர முடியவில்லை.சரிகாவின் படிப்பிற்கு அவரது தாயே இடையூறாக இருந்துள்ளார், தனது தாயிடம் அவர் அதிக கொடுமைகளை அனுபவித்த காரணத்தால் அவரை விட்டு பிரிந்து தனியா வசிக்க ஆரம்பித்தார்.இந்த சமயத்தில் தான் தென் இந்திய சினிமாவில் கலக்கிவந்த கமலுடன் பழக்கம் ஏற்பட்டது,

இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலேயே சேர்ந்து வாழ்ந்தனர். ஏனெனில் கமல் மேற்கத்திய கலாச்சாரத்தை விரும்புபவர்.திருமணம் செய்துகொள்ளாமலேயே ஸ்ருதி மற்றும் அக்ஷரா ஆகிய இருவரும் பிறந்தனர்.இரண்டு குழந்தைகள் பிறந்து பிறகு 1988ல் இருவரும் சிவாஜி முன்னிலையில் திருமணம் செய்துக் கொண்டனர்.திருமணத்திற்கு பிறகு சினிமாதுறையை விட்டு சரிகா விலகினார். 1988 ஆம் ஆண்டில் கமலை திருமணம் செய்துகொண்ட இவர் 2004 ஆம் ஆண்டு இவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.

விவாகரத்து பெறவிருக்கும் போது சரிகா தற்கொலைக்கு முயற்சித்தார் என கூறப்படுகிறது. தற்கொலை முயற்சியின் போது பலத்தை காயங்கள் மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் மூன்று மாதங்கள் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதேவேளை, விவாகரத்தின் பின்னரும் இன்று வரை கமலை சரிகா காதலித்து தான் வருகின்றார். உண்மையான காதல் என்றும் வாழும் காதலர்கள் தான் பிரிகின்றனர்.