முதலிரவின் போது வேண்டாமென ஓட்டம் பிடித்த பிரபல நடிகையின் கணவர்.. ஏன் தெரியுமா?

நடிகை கஜோல் 1999 ஆம் ஆண்டு நடிகர் அஜய் தேவ்கானை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.திருமணம் செய்யும் முன்பே தனது காதல் கணவருக்கு ஒரு நிபந்தனையை விதித்துள்ளார் கஜோல்.அதாவது 2 மாதங்கள் தேனிலவு செல்ல வேண்டும். தேனிலவின் போது உலகை சுற்றிப் பார்க்க நான் விரும்பினேன். அஜய் சம்மதித்ததையடுத்து விமான டிக்கெட்டுகளை புக் செய்தோம்.

ஆஸ்திரேலியாவுக்கு சென்றோம். அங்கிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ், லாஸ் வேகாஸ் என்று ஒவ்வொரு இடமாக சென்றோம். பின்னர் கிரீஸுக்கு சென்றோம். அதற்குள் 40 நாட்கள் ஓடிவிட்டது. 40 நாட்களிலேயே அஜய் சோர்வடைந்துவிட்டார்.ஒரு நாள் காலை என்னை எழுப்பி தனக்கு காய்ச்சல் மற்றும் தலைவலியாக இருப்பதாக கூறினார்.காய்ச்சல், தலைவலி என்றால் மருந்து வாங்கித் தருகிறேன் என்று நான் அஜய்யிடம் கூறினேன்.

ஒரு தலைவலிக்காக பயணத்தை ரத்து செய்துவிட்டு வீட்டிற்கு செல்ல வேண்டுமா என்று நான் அஜய்யிடம் கேட்டேன். அவரோ என்னால் முடியவில்லை, மிகவும் சோர்வாக உள்ளது நாம் தேனிலவை நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றுவிடுவோம் என கூறினார்.

ஆண்டுகள் கழித்து இந்த நிகழ்வை நினைவுகூர்ந்துள்ளார் கஜோல். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கஜோல், அஜய் திருமணம் இரு வீட்டார் மற்றும் சில நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. மற்றவர்களை அழைக்காமல் ரொம்பவே எளிமையாக திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.