பிரபல தமிழ் நடிகரின் மனைவி திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை- அதிர்ச்சியில் பிரபலங்கள்

சின்னத்திரை நடிகர்கள் மன உளைச்சலால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்வது வழக்கமாக நடந்து வருகிறது.சென்னையில் தமிழ் நடிகரின் மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.யாகாவராயினும் நாகாக்கா உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் துணை நடிகர் சித்தார்த்.தமிழ் ரசிகர்களால் கவரப்பட்ட இந்த படத்தில்  பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி முதன்முறையாக நடித்திருந்தார். ஆதி மற்றும் மிதுன் சக்ரவர்த்தியுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகர் சித்தார்த்,

இவருக்கும், ஸ்மிரிராஜா என்பவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.இந்நிலையில், நேற்று இரவு ஹொட்டல் ஒன்றுக்கு சாப்பிட சென்ற இவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதனால் தனி அறையில் சென்று படுத்துக்கொண்ட மனைவி இரவு தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார்.

இது வெளியில் படுத்திருந்த நடிகருக்கு தெரியவில்லை.காலையில் கண்விழித்து பார்த்தபோது தனது மனைவி தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

சம்பவம் அறிந்த காவல்துறையினர் நடிகர் சித்தார்த் வீட்டிற்கு விரைந்து சென்று ஸ்மிரிராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*