தமிழகத்தை உலுக்கிய கொலை வழக்குகள்! சிசிடிவியில் பதிவான காட்சிகள்

இன்று திரும்பும் இடங்கள் எல்லாம் கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் தான் நடக்கின்றன.தெருக்களிலோ, இல்லை வீட்டிலோ நடக்கும் பல கொலை, கொள்ளை சம்பவங்களை கண்டுபிடிக்க சிசிடிவி கமெரா தான் தற்போதைய காலக்கட்டத்தில் உதவுகிறது என்று கூறினால் அது மிகையாகாது.தமிழகத்தை உலுக்கிய சில கொலைகளையும், இந்த குற்றங்களை கண்டுபிடிக்க உதவிய சிசிடிவி கமெராவில் பதிவான குற்றவாளிகளின் சம்பவங்கள் குறித்தும் காணலாம்.

ஸ்வாதி கொலை
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் 24ம் திகதி மென்பொறியாளர் சுவாதி வெட்டி கொல்லப்பட்டார்.இந்த வழக்கில் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து பொலிசார் ராம்குமார் என்பவரை கைது செய்தனர்.

ஹாசினி கொலை
சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த ஆறு வயது சிறுமியான ஹாசினி திடீரென மாயமானார்.அதே குடியிருப்பில் வசித்த மென்பொறியாளர் தஷ்வந்த் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த பிறகு, கொலை செய்துள்ளார்.பிறகு, கை பையில் போட்டு வெளியே எடுத்து சென்ற போது, அங்கு பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இதை வைத்து பொலிசார் அவரை பிடித்தனர்.

குழந்தைகளை கொன்ற அபிராமி
குன்றத்தூரை சேர்ந்த அபிராமி (25) கள்ளக்காதலன் சுந்தரத்துடன் சேர்ந்து வாழ தனது குழந்தைகள் அஜய் (7), கார்னிகா (4)-வை கொலை செய்தார்.சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொலிஸ் கோயம்பேடு பஸ்நிலையத்திற்கு அவர் ஸ்கூட்டியில் தப்பி சென்றதும். அங்கு முகத்தில் கட்டியிருந்த துப்பாட்டாவை விலக்கியதும் சிசிடிவி-வில் பதிவானது. உடனடியாக அங்கு சென்ற பொலிசார் அபிராமியை மடக்கி பிடித்தனர்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*