தமிழ் நடிகை ராதிகாவின் வெளிநாட்டு கணவர் இவர்தான்? சரத்குமார் எத்தனையாவது கணவர் தெரியுமா?

தென்னிந்திய திரைப்பட நடிகையான ராதிகாவின் தற்போதைய கணவர் சரத்குமார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் ராதிகாவின் மூன்றாவது கணவர் என்பது பலருக்கு தெரியாத ரகசியம்.இலங்கையில் கொழும்பு என்ற நகரில் 1962ஆம் ஆண்டு ஆகஸ்டு 21ஆம் திகதி நடிகர் எம். ஆர். ராதாவுக்கும், அவரின் மூன்றாம் மனைவி கீதாவிற்கும் பிறந்தவர் ராதிகா.ராதிகா நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமாரை 2001 ஆம் ஆண்டில் திருமணம் புரிந்தார்.

இவர்களுக்கு இராகுல் என்ற மகன் 2004 ஆம் ஆண்டில் பிறந்தார். சரத்குமாரை திருமணம் புரிய முன்னர் ராதிகா இரு முறைகள் திருமணம் புரிந்து விவாகரத்துப் பெற்றவர்.முதல் முறை மலையாள நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தனையும், பின்னர் இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சார்டு ஹார்டி என்பவரையும் திருமணம் புரிந்தார்.

ராதிகாவின் முதல் குழந்தையான ரயான் (Rayane) ரிச்சர்ட் ஹார்டி உடனான திருமண பந்தத்தில் பிறந்தவர்.

ஆனால், 1990ல் நடந்த இவர்களது திருமணம் இரண்டே வருடத்தில் முடிவுக்கு வந்தது. ராதிகாக தன் முதல் குழந்தையை பெற்றெடுக்கும் போதே, திருமண உறவில் இருந்து பிரிந்திருந்தார்.