தேங்காய் ஸ்ரீனிவாசன் பேத்தியா இந்த நடிகை – இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே!புகைப்படம் உள்ளே!

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் காலகட்டத்தில் குணச்சித்திர நடிகராகவும், காமெடி நடிகராகவும் கலக்கியவர் நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசன். நடிகர் தேங்காய் ஸ்ரீனிவானுக்கு ஒரு பேரனும், ஒரு பேத்தியும் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் நடிகர்கள் தான் என்பது பலபேர் அறிந்திடாத ஒன்று.இவர் எம்.ஜி.ஆர்., சிவாஜி உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் சினிமாவில் காமெடி நடிகராகவும், குணசித்திர நடிகராகவும், பல படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். இவர் போடாத வேஷமே இல்லை என்று கூறலாம்.

ரஜினி நடித்த ‘தில்லுமுல்லு’ படத்தில் இவரின் நடிப்பை இப்போதும் யாரும் மறக்கமாட்டார்கள். 900க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவர் 1987ல் மூளையில் ஏற்பட்ட நீர் கசிவால் மரணமடைந்தார். இவர் மற்றும் நாகேஷ் போன்றவர்களை எப்போதும் மறக்க முடியாது.நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியின் பெயர் ஸ்ருதி, சென்னை எஸ் ஆர் ஆம் கல்லூரியில் பட்டபடிப்பை படித்த இவர், கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடித்த ஸ்ரீ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

ஆனால், முதல் படமே படுதோல்வியடைந்தது.அதன் பின்னர் ஆல்பம், தித்துக்குதே, நள தமயந்தி போன்ற பல படஙக்ளில் நடித்திருந்தார்.ஆனால், இவர் நடித்த எந்த படமும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையாததால் சினிமாவில் இருந்து நடிப்பதை நிறுத்திவிட்டார் நடிகை ஸ்ருதி. நடிகை ஸ்ருதிக்கு, ஆதித்யா சிவ்பிங்க் என்ற சகோதரரும் இருக்கிறார்.

தற்போது அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் பேட்ட படத்தில் ஒரு கல்லூரி மாணவனாக நடித்து வருகிறார்.இன்னிலையில் தற்போது இவரது பேரனும் நடிக்க வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்து வரும் ‘பேட்ட’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*