காமெடி நடிகர் ப்ளாக் பாண்டி மனைவியா இது! யார் தெரியுமா ? புகைப்படம் உள்ளே !!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களில் காமெடி செய்யும் நபர்கள் மிகவும் குறைவு அப்படி காமெடி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் காமெடி நடிகர் பாண்டி. இவரை எல்லோரும் செல்லமாக பிளாக் பாண்டி என்று கூப்பிடுவார்கள்.சிறு வயது முதலே சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்துவந்தார்.தமிழில் 2000 வெளியான நாசர், விவேக், வடிவேலு போன்றவர்கள் நடித்த கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற காமெடி படத்தில் வடிவேலுவின் மகனாக நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பிறகு கில்லி,ஆட்டோகிராப்,தீக்குச்சி,சாட்டை போன்ற பல படங்களில் இவரது காமெடிகள் மிகவும் ரசிக்கப்பட்டது .ஆட்டோகிரபிற்கு பிறகு இவருக்கு விஜய் டீவி யில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் இவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வரத்தொடங்கின.

இவர் அதற்கு முன்னர் பல படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது 2010 இல் வெளியான அங்காடி தெரு படத்தில் தான். அந்த படத்தில் இவர் செய்த காமெடியும் சரி நடிப்பும் சரி ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்டது. தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த பாண்டி 7 வருடமாக பத்மினி என்ற பெண்ணை காதலித்து வந்தார்.

மேலும் அவர் ஒரு எம்.பி.ஏ பட்டதாரியும் கூட பின்னர் பல எதிர்ப்புகளையும் மீறி 2013 டிசம்பர் மாதம் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஐஸ்வர்யா மாலில் பத்மினியை திருமணம் செய்து கொண்டார்.தனது இந்த வெற்றிக்கு காரணம் எப்போதும் தனது மனைவி தான் என்று கூறுகிறார் பாண்டி.