இருசக்கர வாகனங்களை ஒரு நபர் திருட முயன்ற CCTV காட்சிகள்.!

சேலத்தில் வீடுகளின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை ஒரு நபர் திருட முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கோட்டை பகுதியில் ஜானியான் தெருவில் கடந்த 11 ஆம் தேதியன்று அதிகாலை, இருசக்கர வாகனம் ஒன்றை அந்த நபர் நகர்த்திச் செல்கிறான். பின்னர் மீண்டும் வந்த அவன், சுற்றிலும் பார்த்துக்கொண்டே பிற இருசக்கர வாகனங்களை ஒவ்வொன்றாக திறக்க முயல்கிறான். அவற்றை திறக்க முடியாதால் அங்கிருந்து செல்கிறான். இந்தக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன.

இதுகுறித்து அதே வீதியில் வசிக்கும் அப்துல் தாஜீம் என்பவர், சேலம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது இருசக்கர வாகனம் உள்ளிட்ட அங்கிருந்த வாகனங்களை திருட முயற்சி நடந்ததாகவும், இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் புகாரில் அவர் கோரியுள்ளார்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*