மனைவியின் தங்கையை திருமணம் முடிக்க கணவன் செய்த காரியத்தை பாருங்கள்…. அடப்பாவி இப்படியெல்லாமா செய்வ!

ஆந்திர மாநிலம் விஷக்கப்பட்டினத்தை சேர்ந்தவர் கிரண் அகிரே (வயது31). இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் தனது மனைவியின் 16 வயது தங்கையை கடத்திச்சென்றார்.இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஆனால் கிரண் அகிரேவை கண்டுபிடித்து அந்த இளம்பெண்ணை போலீசாரால் மீட்க முடிய வில்லை.இந்நிலையில், சம்பவத்தன்று கிரண் அகிரே வைசாகிலுள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில் தனது மனைவியின் தங்கையுடன் நின்று கொண் டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்று போலீசார் அந்த பெண்ணை மீட்டனர். அப்போது, அந்த பெண்ணின் கையில் பெண் குழந்தை ஒன்று இருந்தது. இதையடுத்து போலீசார் கிரண் அகிரேவை கைது செய்து விசாரித்தனர்.இதில், மனைவியின் தங்கையை கடத்தி கற்பழித்தது தெரியவந்தது.

இதன் காரணமாக அந்த பெண் கர்ப்பிணியாகி கடந்த ஆண்டு குழந்தை பெற்று இருக்கிறார். இருவரும் நாசிக் பகுதியில் கணவன், மனைவி போல் வசித்து வந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மனைவியின் தங்கையை கடத்தி தாயாக்கிய கிரண் அகிரே 2 ஆண்டுக்கு பின் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*