4 சொட்டு நல்லெண்ணெயை சிறுநீரில் விட்டால் போதும் : இந்த மாற்றம் வந்தால்..?

நம்முடைய உடலில் உண்டாகும் அனைத்து வகையான பிரச்சனைகளுக்கும் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் தான் காரணம் என்று ஆரம்பத்திலே நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.இதனை எளிய முறையில் கண்டறிய சிறுநீர் சோதனை ஒன்றை சித்தர்கள் கண்டுபிடித்து வைத்துள்ளனர்.சிறுநீர் பரிசோதனையை எப்படி செய்வது?
காலையில் எழுந்ததும் சிறுநீரை ஒரு தெளிவான கண்ணாடி டம்ளரில் எடுத்து அதில் நான்கு சொட்டு நல்லெண்ணெயை விட வேண்டும்.

அதன் பின் சிறிது நேரம் கழித்து அந்த எண்ணெய்த்துளி சிறுநீரின் மேல் கயிறு போல நெளிந்து காணப்பட்டால் உங்கள் உடலில் வாதம் அளவுக்கு அதிகமாக இருக்கிறது என்று பொருள்.அதுவே மோதிரம் போல வட்ட வடிவில் அல்லது கோள வடிவில் இருந்தால் அது உங்களுக்கு பித்த நோய் உள்ளது என்று அர்த்தம்.

சிறுநீரின் மேல் எண்ணெய் முத்துப் போல அங்கொன்று இங்கொன்றாக நின்று கொண்டிருந்தால் அது கபம் அதிகமாக உள்ளது என்பதை குறிக்கிறது.ஒருவேளை எண்ணெய்த்துளி மிக வேகமாக சிறுநீருக்குள் பரவினால் நோய் விரைவில் குணமடையும் என்பதாக அர்த்தம்.

எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாத் தாமதமாகும்.அதுவே எண்ணெய்த்துளி சிதறினாலோ அல்லது சிறுநீருக்குள் அமிழ்ந்து விட்டாலோ நோயை குணப்படுத்த முடியாது என்று அர்த்தமாகும்.