பிக்பாஸ் எலிமனேஷன் லிஸ்டில் விஜயலட்சுமி… தந்தை செய்த செயல்…!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் சில வாரங்களில் முடிய இருக்கிறது. சொல்லப்போனால் எப்போது நிகழ்ச்சி இறுதிகட்டத்தை அடையும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள் என்றே கூறலாம்.ஒவ்வொரு நாளும் வீட்டில் பிரச்சனை தான், முதல் சீசனில் இருந்தது போல் எந்த ஒரு கலாட்டாவும் இல்லை .நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 16 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.

பின் சென்னை-600028 பட புகழ் நடிகை விஜயலட்சுமி வயல்கார்ட் எண்ட்ரியாக வருகை தந்திருந்தார்.இதுவரை 11 பேர் வெளியேறியுள்ளனர், இறுதியாக கடந்த வாரம் மும்தாஜ்  வெளியேறியதையடுத்து,  பாலாஜி, ஐஸ்வர்யா, ரித்விகா, யாஷிகா, ஜனனி, விஜயலட்சுமி ஆகிய 6 பேர்  உள்ளனர் தற்போது வரை நடிகை ஜனனி மட்டும் ஃபைனலுக்கு செல்வதற்கு கோல்டன் டிக்கெட் பெற்றுள்ளார்.

இந்நிலையில் நடிகை விஜயலட்சுமியின் தந்தையும், பிரபல இயக்குநருமான அகத்தியன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு செய்தி பதிவித்துள்ளார் அதில் விஜயலட்சுமிக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதில் ஒரு இயக்குநராக இல்லை தந்தையாக இந்தப்பதிவு. என் மகள் விஜயலட்சுமிகாக வாக்ககளிக்க தங்களிடம் கேட்பதில் மகிழ்வும் பெருமையும் என்று பதிவிட்டுள்ளார்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*