பிக்பாஸ் ஜூலி நடிப்பில் உருவான “அம்மா தாயி” படத்தின் டீஸர்..!!

கடந்த 2017ம் ஆண்டு மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் உலகம் முழுவதும் பெரிய புகழை சம்பாதித்தவர் ஜூலி. அந்த அடையாளம் தான் அவரை ‘பிக் பாஸ்’ சீசன் ஒன்றுக்கு கொண்டு போனது. ஆனால் அவருக்கு ஜல்லிக்கட்டில் கிடைத்த நல்ல பெயர் இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கவில்லை. அவர் எதிர்மறையாகவே மக்களால் பார்க்கப்பட்டார்.

அதனையும் அவர் மிக இயல்பாக எடுத்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் இவர் மக்களால் நன்கு அறியப்பட்டார்.இதன் மூலம் அவர் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியில் தொகுப்பாளர் அவதாரம் பெற்றார்.

மேலும் உத்தமி மற்றும் அனிதா சில படங்களிலும் நடிக்க துவங்கினர் கதாநாயகியாகவும் நடிக்க தொடங்கினர்.தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள “அம்மன் தாயி” படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

அம்மனின் பெயரில் பக்தி கலந்த ஒரு சமூக கருத்து கொண்ட இப்படத்தை மகேஸ்வரன்-சந்திரஹாசன் கதை-திரைக்கதை-வசனம் எழுதி தயாரிப்பதுடன் படத்தை டைரக்டும் செய்கிறார். புதுமுகம் அன்பு கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.வைரலாகும் இப்படத்தின் டீஸர் இதோ