லலித்குமார் இறப்பதற்கு முன்பு நிலானியிடம் பேசும் கடைசி ஆடியோ! – எப்படியெல்லாம் பேசி இருக்கா பாருங்க!

காதலர் தற்கொலையை தொடர்ந்து நடிகை நிலானி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “என்னைப்பற்றி இரண்டு நாட்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதில் பாதிதான் உண்மை. நான் எந்தத் குற்றமும் செய்யவில்லை, தலைமறைவும் ஆகவில்லை.இரண்டு பிள்ளைகளுக்கு தாயான நான் கணவன் இல்லாமல் தனித்து வாழ்கிறேன்.மேலும் உதவி இயக்குநர் காந்தி லலித்குமாரை திருமணம் செய்ய முடிவு செய்திருந்ததாகவும்

ஆனால் அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் அவரை விட்டு விலகியதாகவும் சீரியல் நடிகை நிலானி கூறினார். சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் டிவி நடிகை நிலானி திருமணம் செய்ய மறுத்ததால் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீக்குளித்தார்.

இதில் பலத்த காயமடைந்த அவர் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி நேற்று காலை காந்தி லலித்குமார் உயிரிழந்தார். இந்நிலையில் நேற்றைய தினத்தில் லலித்குமார் பற்றி பரபரப்பு புகாரை கண்ணீர் மல்க நிலானி வெளியிட்டார்.

இந்நிலையில் தற்போது தற்கொலை செய்வதற்கு முன்பு கடைசியாக நிலானியிடம் காந்தி லலித்குமார் பேசிய ஆடியோ காட்சி வெளியாகியுள்ளது. இந்த ஆடியோ தற்போது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.