உயிருக்கு போராடும் நிலையில் சின்னத்திரை நடிகை நிலானி..!!காரணமானவரின் பெயரை வெளியிட்டதால் பரபரப்பு

சின்னத்திரை நடிகை நிலானி கடந்த சில நாட்களாகவே செய்திகளில் பரபரப்பாக பேசப்படுகிறது. இவர் லலித்குமார் என்பவர் தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துகிறார் என்று போலீஸில் புகார் அளிக்க மனவிரக்தியில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.அவர் இறந்து 1 வாரம் கூட ஆகாத நிலையில் திடீரென்று நடிகை நிலானி இன்று ஆலப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் விஷமருந்து குடித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.நடிகை நிலானி, காந்தி லலித் தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு வற்புறுத்திகிறார் என்று நான்கு தினங்களுக்கு முன் சென்னை கமிஷ்னர் அலுவலகம் சென்று புகார் தெரிவித்திருந்தார்.

இதனால், மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான காந்தி உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.இவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். தொடர் சிகிச்சை அளித்தும் காந்தி மரணம் அடைத்தார்.இதனையடுத்து சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த நிலானி, காந்தி லலித்குமார் தற்கொலைக்கு நான் காரணமல்ல என கூறியுள்ளார்.காந்தி தொந்தரவு செய்ததற்கான ஆதாரம், அவர் அளித்த தொல்லைகளையும் மிகவும் தைரியமாக கூறினார். அவர் பேசிய ஆடியோ போன்றவை சமூக வலைதளங்களில் பரவியது.

நிலானிக்கு எதிரான ஆதாரம்
இந்நிலையில் லலித் காந்தியின் சகோதரர், தன்னுடைய தம்பியின் மரணத்திற்கு முழு காரணம் நிலானி தான், தன்னுடைய தம்பியின் மீது நிலானி தவறான புகார் கொடுத்ததால், காந்தி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.அவரின் தற்கொலைக்கு முக்கிய காரணம் நிலானி மட்டுமே. தன்னுடைய தம்பியை நம்ப வைத்து கழுத்தை அறுத்து விட்டார். தற்போது வரை உண்மை நிலவரம் என்ன என யாருக்கும் தெரியவில்லை.இப்போது தான் நாங்கள் உண்மையை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறோம். மேலும், நிலானிக்கு குடி பழக்கம் உள்ளது. நிறைய ஆண்களுடன் தொடர்பும் உள்ளது விரைவில் இது குறித்து ஆதாரத்தை வெளியிடுவேன் என கூறியுள்ளார்.

தற்கொலை முயற்சி
லலித் காந்தியின் சகோதரர் ரகுகுமார் கூறியதை அடுத்து நிலானி மீதான குற்றச்சாட்டு அம்பலமானதால் வளசரவாக்கம் வீட்டில் கொசுவை கொள்ளும் ஆல் அவுட் மருந்து குடித்து தற்கொலை முயற்சித்துள்ளார்.மருந்தை குடித்ததும் மயக்கமானதை தொடர்ந்து இரண்டு குழந்தைகளும் கண்ணீர் விட்டு பரிதாபமாக கதறி அழுதுள்ளனர். குழந்தைகளின் அழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் நடிகை நிலாணியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.காதலன் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள நிலையில், நிலானி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*