திருமணம் ஆகாமல் இறந்து போன மகன் பெற்றெடுத்த இரட்டை குழந்தைகள்..! எப்படின்னு தெரிஞ்சா ஆச்சர்யபடுவீங்க

தாய்மை ஒரு வரம் என்றே சொல்லலாம் பெண்ணாக பிறந்த ஒவ்வொருவரும் அடைய வேண்டிய உச்சக்கட்ட பாக்கியம் குழந்தை பெற்றெடுப்பதுதான்.ஒரு பெண்ணுக்கு எந்த அளவிற்கு தாய்மை முக்கியமான ஒரு விஷயமோ அதுபோலவே ஒரு ஆணுக்கும் தான் ஒரு குழந்தைக்கு தகப்பனாவது மிகவும் முக்கியமான விஷயம் ஆகும்.இறந்து போன தனது மகனின் உடலிலுள்ள செல்களை சேகரித்து, அதன் மூலம் இரட்டை குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் மனதை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.மஹாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த பிரதாமேஷ் என்ற 27 வயது வாலிபர் ஒருவர் தனது மேல்படிப்புக்காக கடந்த 2010-ம் ஆண்டு ஜெர்மனி நாட்டிற்கு சென்றார்.

அப்போது அங்கு அவர் மூளை புற்றுநோய்யினால் பாதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து சிகிச்சையில் இருந்த பிரதா மேஷ், தான் சிகிச்சை பெற்று வந்த ஜெர்மனி மருத்துவமனையில் தன்னுடைய விந்தணுக்களை சேகரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அதன் பிறகு இந்தியா திரும்பிய இவர், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.இவரது இறப்பு அவருடைய குடும்பத்தினரை மிகவும் பாதித்தது. அவர் இறப்பிற்கு பிறகு ஜெர்மனி மருத்துவமனையில் தன்னுடைய மகனின் விந்து செல்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதை அறிந்து, மருத்துவமனையை பிரதா மேஷ் உறவினர்கள் தொடர்பு கொண்டனர்.

 

அதனை தொடர்ந்து, செயற்கை கருவூட்டலுக்காக புனேயிலுள்ள ஒரு மருத்துவமனையை அணுகி அங்கு, வாலிபரின் விந்து செல்களுடன் தானமான பெற்ற கருமுட்டைகளை சேர்த்து ஆய்வகத்தில் கரு உயிர் வளர்க்கப்பட்டது. பின்னர் அந்த கருவானது வாலிபரின் உறவுக்காரப் பெண்ணின் கருப்பையில் செலுத்தப்பட்டது.இந்தியாவில் முதல்முறையாக இந்தமுறையில் உருவாக்கப்பட்ட குழந்தை இதுவாகும்.

அக்கரு நன்கு ஆரோக்கியமாக வளர்ந்த நிலையில், அப்பெண்ணிற்கு கடந்த திங்கட்கிழமை அன்று இரட்டை குழந்தைகள் பிறந்தன.இறந்து போன தன்னுடைய மகன் திரும்ப கிடைத்து விட்டதாக பிரதாமேஷின் பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.திருமணமே ஆகாமலும், உயிருடனும் இல்லாமலும் இருக்கும் சூழலில்,பிரதாமேஷின் இரட்டை குழந்தைகள் வாரிசு என்பது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இந்த விஷயம் தற்போது மாநிலம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது.மேலும் இந்த விஷயத்தால் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*