36 வயது பெண்ணிடம் ஃபேஸ் புக்கில் சிக்கிய இளைஞர்: வாழ்க்கையே புரட்டிப்போட்ட அதிர்ச்சி நிகழ்வு

இன்றைய நவீன கால கட்டத்தில் ஃபேஸ் புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தாதவர் யாரும் இல்லை. எந்த நேரமும் இளம் தலைமுறையினர் சமூக வலைத்தளங்களில் மூழ்கி கிடக்கிறார்கள். ஃபேஸ் புக் நட்பினால் ஏற்படும் விபரீதங்கள் பற்றி அன்றாடம் வரும் செய்திகளை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.அந்த வகையில் கேரளா மாநிலத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.கேரளாவை சேர்ந்த விபின் என்கின்ற இளைஞர் மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.

ஃபேஸ் புக்கில் மருத்துவர் என்று அவர் குறிப்பிட்டிருந்ததால் ஏராளமான பெண்கள் அவருக்கு Friend Request கொடுத்தனர்.அதில் லலிதா என்கின்ற விவாகரத்து ஆன பெண்ணும் இருந்தார். அவர்களின் நட்பை ஏற்று கொண்ட விபின் வழக்கம்போல் சாட் செய்து கொண்டிருந்தார்.அப்போது லலிதா விபினுடன் பேச ஆரம்பிக்க இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.இருவரும் செல்போனில் பேச ஆரம்பித்தனர். லலிதாவின் பேச்சில் விபின் மயங்கினார். அந்த நட்பு தொடர்ந்தது. சில நாட்களுள் அந்த நட்பு படுக்கை அறை வரை சென்றது. விபினுக்கு படிப்பின் மேல் நாட்டம் குறைந்தது.

பொதுவாக விடுமுறை நாட்களில் லலிதா வீட்டிற்கு செல்லும் விபின், கல்லூரிக்கு லீவு போட்டுவிட்டு செல்ல ஆரம்பித்தார்.இந்த நிலையில் விபினுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. விபின் லலிதா வீட்டிற்கு வருவதை நிறுத்தி விட்டார்.ஒரு நாள் விபின் வீட்டிற்கு சென்ற லலிதா அவர்கள் பெற்றோரிடம், நாங்கள் இருவரும் காதலிக்கிறோம். விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறோம் என்று கூறினார்.இதனை சற்றும் எதிர்பார்க்காத விபின் அதிர்ச்சி அடைந்துள்ளார். விபின் தன்னோடு படுக்கையறையில் இருக்கும் புகைப்படத்தை காட்டி, எங்களுக்கு திருமணம் செய்து வையுங்கள். இல்லை என்றால் பத்து லட்சம் பணம் கொடுங்கள் என்று லலிதா மிரட்டியுள்ளார்இதனால், விபின் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

தனது மகன் செய்த செயலை எண்ணி அவரின் தயார் தற்கொலைக்கு முயற்சி செய்து காப்பாற்றப்பட்டுள்ளார்.விபின் குடும்பத்தார் லலிதாவுக்கு பணம் கொடுத்துள்ளனர். சில மாதங்கள் கழித்து., மீண்டும் லலிதா பணம் கேட்டு தொந்தரவு செய்ய ஆரம்பித்துள்ளார்.நான் பணம் தருகிறேன் என்று கூறி லலிதாவை யாரும் இல்லாத இடத்திற்கு வர சொன்ன விபின் ஆத்திரத்தில் அவரை கொலை செய்துள்ளார்.இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மருத்துவருக்கு படித்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய ஒருவரின் வாழ்க்கை ஃபேஸ் புக் நட்பினால் கேள்விக்குறியாகியுள்ளது.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*