கணவனுக்கு மனைவி கொடுத்த விபரீத தண்டனை..!! காரணத்தை கேட்ட சிரிச்சே செத்துடுங்க.!

கணவன், மனைவி என்று இருந்தால் சண்டையில்லாமல் இருக்காது. சண்டை போட்டால் சமாதானம் ஆகும் வழியைத் தான் பார்க்க வேண்டுமே தவிர பிரச்சனையை பெரிதுபடுத்த முயற்சி்க்கக் கூடாது.அப்படி பெரிதானால் என்ன நடக்கும் என்பதை இப்பதிவில் பாப்போம் டெல்லி அருகே உள்ள ரானோலா பகுதியை சேர்ந்த 22 வயது கர்ப்பிணி பெண் சம்பவத்தன்று கணவர் மனைவிக்கு ஆசையாக முத்தம் கொடுக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி அழகாக முத்தம் கொடுக்கவில்லை எனக்கூறி கணவரின் நாக்கை அரைமணி நேரம் கடித்து துப்பியுள்ளார்.

இதை எதிர்பார்க்காத கணவர் வலியால் சத்தம் போட்டுள்ளார். அந்த நபரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், அந்த நபரை உடனே மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.இந்த தம்பதிக்கு கடந்த நவம்பர் 20, 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்று உள்ளது.

திருமணமானதில் இருந்து இந்த தம்பதியினர் அடிக்கடி சண்டையிட்டு கொள்வார்கள் என்று அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முத்தப் பிரச்சனையில் மனைவி கணவனின் நாக்கை கடித்து துப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*