சற்று முன் பயங்கர விபத்தில் சிக்கிய பிரபல இசையமைப்பாளர் – பரிதாபமாய் உயிரிழந்த குழந்தை

சமீபகாலமாக பிரபலங்களின் மரணம் தொடர்ச்சியாக அரங்கேறிக்கொண்டுவருகிறது. இந்நிலையில் தற்போது சாலை விபத்தில் பிரபல இசையமைப்பாளர் மற்றும் பாடகரான பாலா பாஸ்கர் தனது ஒரு வயது மகளை சாலை விபத்தில் பறிகொடுத்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கேரளாவை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் பாலபாஸ்கர், மனைவி லட்சுமி மற்றும் அவருடைய 2 வயது குழந்தை தேஜஸ்வினியுடன் திருச்சூரில் உள்ள பிரபல கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த போது,அவர் வந்து கொண்டிருந்த கார் நிலைதடுமாறி ஒரு மரத்தில் மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் பாலபாஸ்கர் மற்றும் அவருடைய மனைவி லட்சுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டு தீவிர சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஆனால் அவருடைய குழந்தை தேஜஸ்வினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

மேலும் காரை ஓட்டி சென்ற ஓட்டுநர் அர்ஜுன் கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.இசையமைப்பாளர் பாலபாஸ்கர் தன்னுடைய 12 வயதிலேயே மேடை நிகழ்ச்சிகளில் தன்னுடைய இசை பணியை துவங்கி,

இளம் இசையமைபாளராக உருவாகினார். பல மலையாள படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*