மகன் திருமணம் செய்த பெண்ணிடம் வீடியோவைக் காட்டி மிரட்டும் குடும்பம்! அதிரவைக்கும் பின்னணி காரணம்

தமிழகத்தில் மகனை காதல் திருமணம் செய்ததால், ஆபாச வீடியோவைக் காட்டி அவதூறு பரப்புவதாக இளம் பெண் காதலன் குடும்பத்தினர் மீது புகார் கொடுத்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அத்திக்கோம் பகுதியைச் சேர்ந்தவர் நந்தினி(22).இவரும் அதே பகுதியைச் சேர்ந்த கவியரசன்(24) என்பவரும் கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.இந்நிலையில் கடந்த ஜுலை மாதம் 13-ஆம் திகதி பொள்ளாச்சியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

இதையடுத்து செங்கல்பட்டில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.அப்போது திடீரென இவர்களின் வீட்டிற்கு கவியரசனின் தந்தை முருகேசன், தாய் கவுசல்யா மற்றும் சிலர் அவர்களை வற்புறுத்தி காரில் ஏற்றிச் சென்றுள்ளனர்.அதன் பின் அத்திக்கோம்பை பகுதியில் இருக்கும் வீட்டில் வைத்து நந்தினியை அடித்துள்ளனர்.
இதனால் இந்த விவகாரம் தொடர்பாக நந்தியினியின் தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நந்தினி மற்றும் கணவர் வீட்டாரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது இன்ஸ்பெக்டரிடம் கணவரின் வீட்டார் நந்தினி உறவினர் ஒருவருடன் ஆபாசமாக இருப்பது போன்ற வீடியோவை காட்டியுள்ளனர்.இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நந்தினி.

இதைப் பற்றி கேட்ட போது, உனது ஆபாச வீடியோவை பரப்பி விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.இது பற்றி நந்தினி எஸ்.பி.சக்திவேலிடம் புகார் அளித்துள்ளார். அதுமட்டுமின்றி தனது கணவருக்கு வேறு திருமணம் செய்ய முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*