பிக்பாஸ் இறுதி நேரத்தில் மனம் நொந்துபோன ரித்விகா! உருக வைத்த சம்பவம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போட்டியாளர்களில் தற்போது வரை பலரின் மனங்களை ஈர்த்த ஒருவர் என்றால் அது ரித்விகா தான். ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை பல முறை நாமினேட் ஆகி ஓட்டுக்கு வந்து மீண்டும் மீண்டும் ஜெயித்து தற்போது இறுதி மேடைக்கும் வந்துவிட்டார்.பிக்பாஸிடம் அவரின் நடத்தைக்கு பாராட்டும் கிடைத்தது. கமல்ஹாசனும் அவரை பாராட்டினார். இந்நிலையில் அவர் இறுதி நேரத்தில் மிகுந்த மனவருத்தத்துடன் தான் செய்த தவறுகளை கூறினார்.அதில் பலரும் பொன்னம்பலம் அண்ணாவை நாமினேட் செய்த போது யாஷிகா, ஐஸ்வர்யாவை முதன் முதலில் நாமினேட் செய்தது நான் தான். இதனால் அவர்கள் என்னிடம் பேசுவதை குறைத்துக்கொண்டனர். நாமினேட் செய்வது பிக்பாஸின் விதிமுறை. ஆனாலும் எனக்கு மனவருத்தம் தான்.

மேலும் டாஸ்க் விசயத்தில் டேனிக்கு மூன்று நாட்கள் சாப்பாடு கொடுக்காமல் இருந்ததும் எனக்கு சங்கடமாக இருந்தது. அதேவேளையில் பாலாஜி அண்ணா மீது குப்பை கொட்டிய போது நான் தடுக்கவில்லை. அதுவும் தவறு தான். இதை நினைத்து நான் மிகுந்த மன வருத்த மடைந்திருக்கிறேன்.ஐஸ்வர்யா கையில் பச்சை குத்தியிருக்கும் ‘கோபி’ யார் தெரியுமோ?சென்னை: ஐஸ்வர்யா தனது இடது கையில் கோபி என்ற பெயரை பச்சை குத்தியிருப்பது பற்றி தான் பேச்சாக உள்ளது.

பிக் பாஸ் 2 வீட்டில் உள்ள ஐஸ்வர்யா குறித்து தான் தற்போது சமூக வலைதளங்களில் பேச்சாக உள்ளது. அதற்கு காரணம் அவரது கை விரலில் இருக்கும் பச்சை தான்.அவர் கோபி என்பவரின் பெயரை இடது கை மோதிர விரலில் பச்சை குத்தியுள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக தமிழகத்தில் இருக்கும் ஐஸ்வர்யாவுக்கு கோபி தான் மிகவும் நெருக்கமான நபராம். யார் அந்த கோபி, அவருக்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையே என்ன உறவு என்று விசாரித்தால் எல்லாம் இருக்க வேண்டிய உறவு தானாம். ஐஸ்வர்யாவும், கோபியும் ‘நல்ல நண்பர்கள்’ என்று கூறி சிரிக்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

ஐஸ்வர்யா அந்த கோபியுடன் நெருக்கம் காட்டுவது அவரின் தனிப்பட்ட விஷயம். ஆனால் பிக் பாஸ் 2 வீட்டிற்கு வந்த இடத்தில் ஷாரிக் மீது காதலில் விழுந்தார். அப்படி என்றால் யாஷிகா, மகத் போன்று வெளியே ஆள் இருக்க, வந்த இடத்தில் ஆட்டம் போட்டுள்ளார் ஐஸ்வர்யா. ஹய்யோ, எல்லாமே இப்படிப்பட்ட காதலா என்று பார்வையாளர்கள் நொந்து கொள்கிறார்கள்.

அம்மா உயிருடன் இருக்க அவர் இறந்துவிட்டதாக டேனியிடம் தெரிவித்தவர் ஐஸ்வர்யா. பின்னர் அவர் அம்மா பிக் பாஸ் வீட்டிற்கு வந்த போது அவரின் குட்டு உடைந்தது. போட்டியாளர்கள் தங்களுக்கு விருப்பபட்டவர்களுடன் தொலைபேசியில் பேசும் வாய்ப்பு கொடுத்தார் பிக் பாஸ். அப்போது ஐஸ்வர்யா தனது அம்மாவுடன் அல்ல மாறாக அந்த கோபியுடன் தான் பேசினார்.

கோபியுடன் தொலைபேசியில் பேசியபோது கூட தனது கை விரலில் இருக்கும் பச்சையை தடவியபடியே பேசினார் ஐஸ்வர்யா. இதை பார்வையாளர்கள் பலரும் கவனித்திருக்கிறார்கள். அந்த கோபி யார் என்று சக போட்டியாளர்கள் கேட்டதற்கு பொய் சொல்லி மழுப்பியிருக்கிறார் அவர். இவ்வளவு கோபக்காரியான ஐஸ்வர்யாவுடனும் ஒருவர் நல்ல நண்பராக இருக்கிறார் என்றால் அந்த நபரை பார்க்க வேண்டுமே என்று பார்வையாளர்கள் ஆசைப்படுகிறார்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*