மூன்று வருடம் குடும்பம் நடத்திய மனைவியை நண்பனுக்கு திருமணம் செய்து வைத்த கணவன்..!! எதற்காக தெரியுமா ?

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில், வாங்கிய கடனை நண்பர் திரும்பி செலுத்தாததால் அவரின் மனைவியை திருமணம் செய்து கொண்ட நபரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பைல்ஹொன்குல் தலக் மற்றும் ரமேஷ் ஹுக்கேரி ஆகிய இருவரும் ஒரே ஹொட்டலில் வேலை செய்து வரும் நண்பர்கள் ஆவர்.தன்னுடன் வேலை செய்யும் பார்வதி என்ற பெண்ணை தலக் திருமணம் செய்து கொண்ட நிலையில் தம்பதிக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தை உள்ளது.இந்நிலையில் நண்பர் ரமேஷிடம் தலக் ரூ.500 கடனாக வாங்கிய நிலையில் அதை திருப்பி செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து கடனை திரும்ப தராததால் தன் மனைவியை இரண்டு மாதங்களுக்கு முன்னர் ரமேஷ் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டதாக தலக் தற்போது கூறியுள்ளார்.தலக் கூறுகையில், இரண்டு மாதங்களுக்கு முன்னர் என் மனைவி பார்வதியை, ரமேஷ் திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து வருகிறார்.

தற்போது பார்வதி மீண்டும் கர்ப்பமாக உள்ளார், என்னுடன் சேர்ந்து வாழவும் மறுக்கிறார். இது குறித்து ரமேஷிடம் கேட்டால் அவர் என்னை மிரட்டுகிறார்.பொலிசாரிடம் நான் அப்போதே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் இன்று காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் செய்தேன் என கூறியுள்ளார்.தலக்கின் புகாரையடுத்து பொலிசார் இது குறித்து விசாரிக்க காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*