பாலுடன் வாழைப்பழத்தை சாப்பிட்டால் என்னவாகும் தெரியுமா? அதிர்ச்சி கொடுக்கும் தகவல்.

பாலுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிட்டால் என்னவாகும்? என்பதை பற்றி பலத்துறை நிபுணர்களின் பரிந்துரை என்ன என்பதைப் பார்ப்போம்.நம்மில் பலருக்கு மில்க்சேக் என்றால் பிடித்தமான ஒன்றாகும். அதிலும் கோடைக்காலங்களில் வெப்பத்தை தனிப்பதற்கு பெரிதும் உதவும். பாலுடன் வாழைப்பழத்தை சாப்பிட்டால் நல்லதா? கேட்டதா? என்ற கேள்வி நம்மிடையே எழுகிறது.

இது குறித்து உணவு நிபுணர்கள் கூறுகையில், பாலுடன் வாழைப்பழத்தை உண்பவராக இருந்தால் இன்றே அந்த பழக்கத்தை விடுங்கள் , அது மட்டுமின்றி பால் குடித்த 20 நிமிடங்கள் கழித்து தான் வாழைப்பழம் சாப்பிட வேண்டும். வாழைப்பழம் மில்க்சேக்கை பருகினால் செரிமானப் பிரச்னை ஏற்படும்.

ஆதலால் தவிர்த்தால் நல்லது, என்று விளக்கமளித்தனர்.ஆயுர்வேதத்தின் படி, பாலும் பழமும் முறையற்ற சேர்க்கை என்கிறது. ஆயுர்வேத நிபுணர் கூறுகையில், பாலும் வாழைப்பழத்தை ஒன்றாக சாப்பிட்டால் பக்கவிளைவுகள் ஏற்படும்.

இது ஆஸ்துமா நோயாளிகளுக்கு சுத்தமாக ஆகாது என்கிறார். எந்த உணவையும் அதன் பலனை எதிர்க்கொண்டே, சரியான காலநிலையில் சாப்பிட வேண்டும் என்றார். இலையென்றால் அது நமக்கு பல வகையான பிரச்சனைகளை உண்டாக்கும்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*