
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் நாட்டுப்புற பாடல்களைப் பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் செந்தில் கணேஷ் மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி. சமீபத்தில் இதற்கான சூப்பர்சிங்கரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சியின் முடிவில் செந்தில் கணேஷ் வெற்றி பெற்றார். சினிமா பாடல்களை நம்பி களத்தில் குதித்த போட்டியாளர்கள் மத்தியில், நாட்டுப்புறப்பாடல்கள் பாடி தனக்கென தனி ரசிகர்களை சம்பாதித்த செந்தில் கணேஷ் பலருக்கும் பிடித்தமான போட்டியாளராக இருந்துள்ளார்.
இறுதி போட்டியில் அவர் பாடிய `தாண்டவகோனே’ பாடல் அரங்கத்தில் இருந்த ஓட்டுமொத்த பார்வையாளர்களையும் அழ வைத்தது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் கணேஷ் மற்றும் அவரது மனைவி ராஜலெட்சுமி இருவருக்கும் சமூகவலைத்தளங்களில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து.செந்தில் கணேஷிற்கு அடுத்தடுத்து அதிஷ்டம் குவிந்து கொண்டிருக்கின்றது.சூப்பர் சிங்கர் புகழ் நாட்டுப்புற பாடகர் செந்தில் கணேஷ் தற்போது கதாநாயகனாக களமிறங்கியுள்ளார்.கரிமுகன் என்ற படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தில் செந்தில் கணேஷ் ஒரு அழகான நாட்டுப்புற பாடலையும் பாடியிருக்கிறார்.
இந்த படத்தில் நடிகை காயத்திரி ஐயர் நாயகியாக நடித்து அசத்தியுள்ளார். இந்த படத்தின் First லுக் காட்சிகளை செந்தில் கணேஷ் அவரது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குறித்த காட்சி சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.
Leave a Reply