காதல் தோல்வியில் ராஜாராணி செம்பா… காதலன் கூறியது என்ன?

பிரபல டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஆல்யா. இவரை சீரியலில் வரும் கேரக்டரின் பெயரை வைத்துத்தான் எல்லோரும் செம்பா என்று அழைத்து வந்தனர். இந்த தொடரில் செம்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை மானசா இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமடைந்ததோடு மட்டுமல்லாமல் இளசுகள் மத்தியிலும் படு பெமஸ் ஆகிவிட்டார். ராஜா ராணி தொடரில் நடிப்பதற்கு முன்பு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றிருந்தார்.

அதுபோக ஒரு சில குறும் படத்திலும் நடித்துள்ளார். மேலும், நடிப்பு ,நடனம், டப் ஸ்மாஷ் என்று அசத்தி வருகிறார்.மேலும், மானஸா, மானஸ் என்பவரை நீண்ட வருடங்களாக காதலித்து வருகிறார்.ஆனால், இவர் சீரியலில் நடிப்பது இவரது காதலருக்கு பிடிக்காது என்பதால் இவர்கள் இருவருக்கும் சண்டை கூட வருமாம்.

இந்நிலையில் மானஸா மற்றும் மானஸ் ஆகியோர் இருவரின் காதலில் விரிசல் ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர்.இதுகுறித்து மானஸ் தெரிவிக்கையில், கடந்த காதலர் தினம் வரை நன்றாக தான் எங்கள் காதல் போய்கொண்டிருந்தது.

ஆனால், என்னவானது என்று தெரியவில்லை தற்போது என்னை விட்டு பிரிந்துவிட்டாள், நானும் நல்ல இரும்மா என்று சொல்லி அவளை பிரிந்து விட்டேன் என்று மனாஸ் கூறியுள்ளார்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*