தாய் கூட செய்ய மறுத்த செயலை மருமகளுக்காக மாமியார் செய்தது? ஒரு நெகிழ்ச்சி சம்பவம்..

மாமியார் மருமகள் சண்டைகள் ஆயிரம் இந்த உலகில் நடந்தாலும் இது போன்ற அன்பான மாமியார்கள் இன்னும் இருக்கதான் செய்கிறது.ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்சல்மர் நகரை சேர்ந்தவர் சோனிகா(32). இவர் தனது கணவர் மற்றும் மாமியார் கனிதேவியுன் அதே பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். இந்நிலையில் சோனியாவுக்கு சிறுநீரக கோளாறுஏற்பட்டுள்ளது. மேலும் இவரது இரண்டு சிறுநீரகம் செயல் இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் சோனியா அடிக்கடி டயாலிஸிஸ் செய்து வந்தார். மேலும் டயாலிஸில் செய்த வந்த அவருக்கு நோய் சற்று தீவிரமான நிலையில் உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.  சோனிகாவுக்கு அவரின் தாய் பன்வாரி தேவி, தந்தை மற்றும் சகோதரரின் சிறுநீரகம் பொருந்திய நிலையிலும்

உயிருக்கு ஆபத்து நேரிடுமோ என்ற அச்சத்தில் அவர்கள் யாரும் கொடுக்க முன்வரவில்லை.இதையடுத்து சோனிகாவின் மாமியார் கனிதேவி தனது சிறுநீரகத்தை மருமகளுக்கு கொடுக்க முன்வந்தார்.

இதையடுத்து சோனிகாவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.என் மாமியாருக்கு நன்றி கடன் பட்டுள்ளேன், அவர் எனக்கு புதிய வாழ்க்கையை கொடுத்துள்ளார் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் சோனிகா.