சரத்குமாரின் முதல் மனைவியின் மகளுக்கு அவசர அவசரமாக ரகசிய நிச்சயதார்த்தம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகர் சரத்குமாரின் முதல் மனைவியின் மகளும் நடிகையுமான வரலட்சுமிக்கு ரகசிய நிச்சயதார்த்தம் நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.”போடா போடி” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்த வரலக்ஷ்மி.இப்படத்தை தொடர்ந்து “தாரா தப்பட்டை” “விக்ரம் வேதா” என அடுத்தடுத்த படத்தில் தனது நடிப்பின் மூலம் முத்திரை படைத்த்தார்.தற்போது சண்டக்கோழி,சர்கார், நீயா-2, போன்ற பல பெரிய படங்களில் நடித்து வருகிறார்.இவர் நடிகர் விஷாலை காதலிப்பதாக பல காலமாக பேசப்படுகிறது. இதைப்பற்றி இருவருமே வாய்திறந்ததில்லை.

ஆனால் ஊடகங்களோ மைக் வைக்காத குறையாக இவர்களது காதலை பற்றி கிசு கிசுத்து வருகிறார்கள். இந்நிலையில் விரைவில் வெளியாகவிருக்கும் சண்டக்கோழி -2 படத்தில் இருவரும் சேர்ந்து நடித்துள்ள நிலையில்.வரலக்ஷ்மிக்கு-விஷாலுக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது என்றும், விரைவில் திருமணம் நடக்க போகின்றது என்றும் சில செய்திகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது.

இது குறித்து வரலக்ஷ்மி, தற்போது கூறியிருப்பதாவது, என் திருமணம் பற்றி வெளியாகும் செய்திகள் உண்மையல்ல, எனக்கு நிச்சயதார்த்தமும் நடக்கவில்லை ஏதாவது இருந்தால் தானே சொல்கிறேன்.

தற்போதைக்கு திருமணம் இல்லை. என் பெற்றோர் என்னை நிர்பந்திக்கவில்லை. நான் தயாரானால் நடக்கும் என்றார்.சொல்வதற்கு எதுவும் இல்லை என கூறியுள்ளார்.மேலும் இதுபோன்ற வதந்திகளை பிறப்பும் வேலைவெட்டி இல்லா நண்பர்களுக்கு நன்றி எனக் கூறியுள்ளார்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*