அடுத்த 48 மணி நேரத்திற்கு நீங்க ஸ்மார்ட் போன் பயன்பாடு முடக்கம்..!! வெளியான அதிர்ச்சி தகவல்

டொமைன் சர்வர்கள் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் இணையதள சேவை பயன்படுத்துவர்களுக்கு இணைப்பு சிக்கல்கள் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 48 மணி நேரத்திற்கு இந்த பழுதுபார்ப்புப் பணி நடைபெற இருப்பதால் உலகம் முழுவதும் இந்த பாதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து ரஷ்யா தெரிவித்துள்ள தகவலில், ”உலக அளவில் இணையதளம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இணையதள சேவை பாதிப்பு நிகழலாம். நெட்வொர்க் கட்டமைப்புகளும் பாதிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.இன்டர்நெட் கார்பரேஷன் ஆப் அசைண்டு நேம்ஸ் அண்டு நம்பர்ஸ் (ICANN) என்ற அமைப்பு.

இந்த பழுதுபார்ப்புப் பணியை மேற்கொள்ள உள்ளது.இணையத்தில் இருக்கும் தகவல்களை பாதுகாத்து வரும் cryptographic key மாற்றப்படும் என்று தெரிய வந்துள்ளது. சமீபத்தில் தொடர்ந்து இணையதளங்கள் ஹேக் செய்யப்படும் சம்பவங்கள் நடப்பதால் cryptographic key மாற்றம் அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.மேலும், டொமைனில் இருக்கும் பெயர்கள் மற்றும் தகவல்களை பாதுக்காக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இதை முறைப்படுத்தவும், பாதுகாக்கவும், நிலையான இணையதள சேவைக்கு இந்த பழுதுபார்ப்பு அவசியம் கூடுதலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில இணையதள சேவை அளிப்பவர்கள் இந்த மாற்றத்திற்கு தயாராகாவிட்டால் அவர்களது இணைப்பில் இருக்கும் வாடிக்கையாளர்கள் இணையதள இணைப்பு பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்று தகவல் தொடர்பு ஒழுங்குறை ஆணையம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் அடுத்த 48 மணி நேரத்திற்கு இணையதள பக்கங்கள் பெறுவது மற்றும் தகவல்கள் பரிமாற்றத்தில் சிக்கல் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இணையதள பயன்பாட்டாளர்கள் புழக்கத்தில் இல்லாத ISP பயன்படுத்தும்பட்சத்தில் இணையதள சிக்கல்கள் ஏற்படும் என்று அறிய வந்துள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*