புதுத்தாலி, பட்டுபுடவையோடு கள்ளக்காதலனுடன் கிரிவலம் வந்த மனைவியை கையும் களவுமாக பிடித்த கணவர்..!! அடைகொடுமையே இப்படியும் ஒரு பெண்ணா?

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்தவர் சமிதா(18) . இவர் சாலை நகர் பகுதியை சேர்ந்த உறவினரான சக்திவேல் என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருத்தணி முருகன் கோவிலில் வைத்து திருமணம் நடந்துள்ளது.திருமணத்தின் போது குரூப் போட்டோ எடுப்பது தொடர்பாக மாப்பிள்ளை வீட்டிற்கும், பெண் வீட்டிற்கும் தகராறு வந்ததுள்ளது. பின்னர் சமரசம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதனை காரணம் காட்டி திருமணம் ஆன சில தினங்களிலேயே சமிதா கோபித்துக் கொண்டு தாய்வீட்டுக்கு சென்று விட்டார்.சக்திவேல் பலமுறை சாமிதாவை சந்தனம் செய்ய முற்பட்டபோது .கோபமாக இருப்பதாக காட்டிக்கொண்ட சமிதா, கணவர் சக்திவேலுவுடன் செல்ல மறுத்துவிட்டார்.

 

இந்த நிலையில் மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டி சக்திவேல் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றார். அப்போது மனைவி சமிதா வேறொரு இளைஞருடன் கழுத்தில் புதிதாக கட்டப்பட்ட மஞ்சள் தாலியுடன் ஜோடியா கிரிவலம் செல்வதை கண்டு திகைப்படைந்தார்.அவர்களை பின் தொடர்ந்து சென்ற போது அவர்கள் புதுமண தம்பதிகள் போல நடந்து கொள்வதை கண்டு சந்தேகம், அடைந்து சமிதாவை மறித்துள்ளார் கணவர் சக்திவேல்..!சமிதாவுடன் கிரிவலம் வந்தவர் பள்ளி பருவ காதலன் கார்த்திக் என்பதும் சமிதாவும் கார்த்திக்கும் தற்போது புதிதாக திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.

இதையடுத்து சக்திவேல் தனது மனைவி தன்னை விவாகரத்து செய்து கொள்ளாமல் வேறொரு இளைஞரை 2 வது திருமணம் செய்து கொண்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்காவல் துறை விசாரணையில் சமிதாவின் காதல் திருவிளையாடல் வெளிச்சத்துக்கு வந்தது.சமிதா, 11 ஆம் வகுப்பு படிக்கும் போது கார்த்திக்கை காதலித்த நிலையில், இருவரும் எல்லைமீறியதால் சமீதா கர்ப்பம் அடைந்துள்ளார். கார்த்திக் தங்களை விட குறைந்த ஜாதி என்பதால் சமிதாவின் கர்ப்பத்தை கலைத்த குடும்பத்தினர் சமிதாவை ஊரை விட்டு சாலை நகரில் உள்ள உறவினரான சக்திவேல் வீட்டில் பாதுகாப்புக்கு தங்க வைத்துள்ளனர்.

அங்கு 2 மாதம் தங்கி இருந்த நிலையில் சக்திவேலுவுக்கும், சமிதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவருக்கும் பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். கணவன் வீட்டாரிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்ற சமிதா பழைய காதலன் கார்த்திக்கை சந்தித்து பேசி உள்ளார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டு திருவண்ணாமலையில் ஜோடியாக கிரிவலம் வந்துள்ளனர் என்கின்றனர் காவல்துறையினர்.சமிதா முதல் கணவரை விவாகரத்து செய்யாமல் 2 வது திருமணம் செய்து கொண்டது குற்றம் என்ற அடிப்படையில் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*