கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்த மனைவி! காட்டிக்கொடுத்த கூகுள் மேப்…. பின்பு நடந்தது என்ன?

பெருவை சேர்ந்த நபர் ஒருவர் தான் செல்ல வேண்டிய இடத்திற்கு வழி தெரியாமல் போனதால். கூகுள் மேப்பின் உதவியை நாடி இருக்கிறார். அப்போது கூகுள் மேப் வழியை பின்தொடர்ந்த போது, ஒரு இடத்தில் சாலை ஓரத்தில் பார்க் பெஞ்சில் ஒரு ஜோடி ரொமான்ஸ் செய்துக் கொண்டிருந்த காட்சி பதிவாகி இருப்பதை செயலியில் கவனித்திருக்கிறார்.வினோதமான காட்சி பதிவாகி இருப்பதை கண்ட அந்த ஆண், அதை ஸூம் செய்து பார்த்திருக்கிறார். அப்போது தான் அந்த கூகுள் மேப் செயலியில் பதிவாகி இருப்பது தனது மனைவி என்றும் உடன் இருப்பது அவரது கள்ள காதலர் என்பதையும் அறிந்து அதிர்ந்து போயிருக்கிறார் .


பெருவின் தலைநகரான லிமாவில் தான் கூகுள் கேமரா காரில் அந்த அந்நபரின் மனைவி மற்றும் கள்ளக்காதலர் பார்க் பெஞ்சில் ரொமான்ஸ் செய்துக் கொண்டிருந்தது பதிவாகி இருக்கிறது. உடனே, அந்த பதிவை தனது மொபைலில் இருந்து ஸ்க்ரீன்ஷாட் எடுத்த அந்த ஆண், அதை ஆதாரமாக கொண்டு விவாகரத்து வழக்கு தொடர்ந்தார்.

தன் மனைவியை கூகுள் மேப் ஆதாரம் கொண்டு விவாகரத்து செய்த அந்த கணவர், அந்த புகைப்படங்களை தனது முகநூலில் பதிவிட்டு இருந்தார்.இந்த பதிவை கண்ட முகநூல் பயனாளிகள் பலரும் ஆச்சரியம் அடைந்தனர்.

இப்படி கூட கூகுள் கேமரா கார் பதிவு செய்யுமா? இன்னும் என்னென்ன காட்சிகள் கன்றாவிகள் எல்லாம் கூகுள் மேப்களில் பதிவாகி இருக்கிறது என்பதை தெரு, தெருவாக தேடி பார்த்தால் தான் தெரியும்.