சின்மயி விவகாரம் குறித்து வைரமுத்துவின் மனைவி கூறியது என்ன?

கவிஞர் வைரமுத்து இசை நிகழ்ச்சிக்காக சுவிட்சர்லாந்து சென்ற போது தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று பாடகி சின்மயி பாலியல் புகார் அளித்தார். இதற்கு சில நாட்கள் கழித்து வைரமுத்து மறுப்பு தெரிவித்து வீடியோ அனுப்பியுள்ளார்.தான் அந்த தவறை செய்யவில்லை என்றும் அதனை நிரூபிக்க உறுதியான ஆதரத்தை இவ்வளவு நான் திரட்டியுள்ளேன். இனி நேருக்கு நேர் சந்திக்கத் தயார் என்று கூறியிருந்தார்.

அதற்கு சின்மயி வைரமுத்து உண்மை கண்டறியும் சோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று பதில் கூறியதோடு காணொளி ஒன்றையும் வெளியிட்டார்.தற்போது வைரமுத்துவின் மனைவி என்னுடைய கணவர் எந்தவொரு தவறையும் செய்திருக்கமாட்டார். எந்த ஒரு விடயத்தையும் தன்னிடம் மறைக்காமல் கூறிவிடுவார். அவரது பெயரைக் கெடுப்பதற்கு இவ்வாறு பலி சுமர்த்தியுள்ளனர் என்றும் உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என்று கூறியுள்ளார்.