விதவையாகி காதலனை கரம் பிடிக்க இளம்பெண் செய்த விபரீத நாடகம்..!! என்ன செய்தார் தெரியுமா?

சென்னையில் மனைவி ஒருவர் வழிபறி நாடகம் நடத்தி திருமணமான 20 நாளில் கணவனை கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கதிரவன், அங்குள்ள தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அவருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா என்பவருக்கும் கடந்த 20 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.இந்நிலையில் திருவான்மியூர் கடற்கரையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், தங்களை வழிமறித்துத் தாக்கி.

12 சவரன் தங்க சங்கிலியையும், செல்போனையும் பறித்து சென்றதாகவும், தடுக்க முயன்ற தனது கணவர் கதிரவனை இரும்பு கம்பியால் மூன்று முறை தலையில் தாக்கியதாகவும் அனிதா கூறியுள்ளார். அனிதாவின் பேச்சு முன்னுக்கு பின் முரணாக இருந்ததால் அந்த பகுதியில் உள்ள CCTV காட்சிகளை போலீசார் ஆராய்ந்துள்ளனர். அதில் சிசிடிவி கமெராவில் சிக்கிய காட்சிகளும் அனிதா சொல்வது வேறுபட்டிருந்தன இதை வைத்து அவரிடம் நடந்த விசாரணையில்

பிடிக்காமல் திருமணம் செய்து கொண்ட மனைவியே தனது முன்னாள் காதலனான ஆண்டனிஜெகன் மூலமாக கொள்ளை சம்பவம் என்ற போர்வையில் கணவரை கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அனிதாவையும், ஆண்டனிஜெகனையும் கைது செய்த பொலிசார், காதலன் வைத்திருந்த நகைகள் மற்றும் செல்போன் ஆகியவற்றை மீட்டுள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கதிரவன் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*