சின்மயிடம் சரமாரியாக கேள்வி கேட்ட பாண்டே… கடைசியில் வைத்த முற்றுப்புள்ளி என்ன தெரியுமா?

கவிஞர் வைரமுத்து இசை நிகழ்ச்சிக்காக சுவிட்சர்லாந்து சென்ற போது தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.  இதற்கு சில நாட்கள் கழித்து வைரமுத்து மறுப்பு தெரிவித்து வீடியோ அனுப்பியுள்ளார்.தான் அந்த தவறை செய்யவில்லை என்றும் அதனை நிரூபிக்க உறுதியான ஆதரத்தை இவ்வளவு நாள் திரட்டியுள்ளேன். இனி நேருக்கு நேர் சந்திக்கத் தயார் என்று கூறியிருந்தார்.அதற்கு சின்மயி வைரமுத்துவிற்கு உண்மை கண்டறியும் சோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று பதில் கூறியதோடு காணொளி ஒன்றையும் வெளியிட்டார்.

தொடர்ந்து இவ்வாறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது சின்மயி வைரமுத்து மீது வழக்கு தொடரப்போவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார். பிரபல ரிவியில் ரங்கராஜ் பாண்டே, சின்மயிடம் தாறுமாறாக கேள்விகளை கேட்டுள்ளார். அப்பொழுதே வழக்கு தொடர்ந்திருக்கலாம் அல்லது பொலிசில் புகார் அளித்திருக்கலாம்.

ஆனால் 15 வருடம் கழித்து ஒருவரை பற்றி குற்றம் சாட்ட வெறும் ட்விட் மட்டுமே செய்வேன்,விவாதம் செய்யமாட்டான் எதற்கும் போக மாட்டேன் என்றிருந்தால் எப்படி என்று கேள்வி கேட்டார்.?

அதற்கு சின்மயி நீதிமன்றம் விடுமுறை என்று கூறி பாண்டேயின் வாயை அடைத்தார்.அதன் பின்பு வைரமுத்து மீது வழக்கு தொடர சின்மயி தயாராக இருக்கிறார் என்று கூறினார்… அதற்கு சின்மயி ஆமாம் என்று பதிலளித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*