திருமணமான 15 வது நாளில் புதுமணப் பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தை! அதிர்ச்சியில் உறைந்த புதுமாப்பிள்ளை

தமிழகத்தில் திருமணமான 15-வது நாளில் வயிற்று வலி என்று அனுமதிக்கப்பட்ட புதுமணப் பெண்ணுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ள சம்பவம் உறவினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள கலைஞர் நகரைச் சேர்ந்த அஜீஸ். இவருக்கும் தர்மபுரி மாவட்டத்தைச் சேரந்த பர்வீன் பானு என்பவருக்கும் மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து கடந்த 15-நாட்களுக்கு முன் உறவினர்கள் முன்னிலையில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.அதன் பின் கணவரின் ஊருக்கு வந்த பர்வீன் பானு, கடும் வயிற்று வலி இருப்பதாகக் கூறி, அஜீஸுடன் சரிவர பேசாமலும் பழகாமலும் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு பர்வீன்பானுவுக்கு திடீரென வயிற்றுவலி அதிமானதால், அவரை அஜீஸ் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் குழந்தை பிறந்துவிடும் என கூறியுள்ளனர்.திருமணம் ஆகி 15 நாட்கள் கூட முடியவில்லை, அதற்குள் எப்படி குழந்தை என்று அஜிஸ் விரக்தியுடன் மருத்துவமனையை விட்டு சென்றுள்ளார்.இதனிடையே அதிகாலையில் பர்வீன்பானுவுக்கு ஆண்குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்தவுடன் பிறப்பை பதிவு செய்து சான்றிதழ் கொடுக்க வேண்டிய சூழலில். மருத்துவமனையில் இருந்து அஜீஸ் சென்றுவிட்டதால், பர்வீன்பானுவின் உறவினர்களை அழைத்துப் மருத்துவர்கள் பேச்சு நடத்தி வருகின்றனர்.

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதை மறைத்த பர்வீன்பானு மற்றும் அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்தது குறித்து காவல்நிலையத்தில் அஜீஸ் புகாரளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*