மனைவியை கொலை செய்து காதலிக்கு பரிசாக அளித்த கணவர்..! 15 ஆண்டுகள் கழித்து அம்பலமான தகவல்

தனது மனைவியை கொலை செய்து காதலிக்கு பிறந்தநாள் பரிசாக அளித்துவிட்டு கடந்த 15 வருடங்களாக சந்தோஷ வாழ்க்கை வாழ்ந்து வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கேரளாவை சேர்ந்த தருண் என்பவருக்கு 2003ம் ஆண்டு வங்கி ஊழியர் ஒருவருடன் திருமணமாகியுள்ளது.திருமணமான 3 மாதத்தில் தருணின் மனைவி இறந்து போக தனது மனைவியை கொள்ளை முயற்சியில் மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டதாக பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.அதன்பின்னர், பெங்களூருக்கு சென்றுள்ளார். அங்கு, தனது பெயரை பிரவீன் என மாற்றி தனது காதலி நிஷாவை திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் பிறந்ததையடுத்து, சந்தோஷமாக கடந்த 15 ஆண்டுகளாக வசிந்து வந்தனர்.இந்த வழக்கை விசாரித்து வந்த கிரண் சவுத்ரி, கொலைக் குற்றச்சாட்டுக்கு உள்ளான தருணின் அலுவலகத்திற்கே ஊழியர் வேடத்தில் சென்று தருணை கையும் களவுமாக கைது செய்துள்ளார்.கைதுக்கு பின்னர் வாக்குமூலம் அளித்த தருண் , மனைவியை தானே கொலை செய்ததாகவும், அடையாளங்களை மாற்றி வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது காதலி நிஷா திருமணம் ஆகாமல் இருந்த காரணத்தால், அவரை திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்தேன். அதன்படி, எனது மனைவியை கொலை செய்து அதனை காதலர் தின பரிசாக எனது காதலிக்கு அளித்து, அவளை மகிழ்விக்க கொலை செய்துவிட்டு தப்பித்து வந்து, எனது காதலியை திருமணம் செய்துகொண்டேன் என கூறியுள்ளார்.

15 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சம்பவம் வெளியே வந்துள்ளது. தருண் தனது பெயர் மற்றும் அடையாளங்களை மாற்றி வாழ்ந்து வந்த காரணத்தால் பொலிசாருக்கு இதில் சிக்கல் ஏற்பட்டு ஒருவழியாக தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*