கணவனுக்காக விரதம் இருந்த பெண்ணை கணவனே கொலை செய்த கொடூரம்.! எதற்காக தெரியுமா?

குஜராத்தில் விரதம் இருந்த காதல் மனைவியை 8 வது மாடியிலிருந்து கணவன் தள்ளிவிட்டு கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அரியானா மாநிலம் குர்கான் பகுதியை சேர்ந்த தீபிகா (32), தனியார் வாங்கி ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2013ம் ஆண்டு விக்ரம் சௌஹானை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இந்த தம்பதியினருக்கு தற்போது 4 வயதில் ஒரு மகனும், 6 மாத கைகுழந்தையும் உள்ளனர்.வடஇந்தியாவில் ஒருநாள் விழாவாக கொண்டாடப்படும் “கர்வா சௌத்” நிகழ்வு.

அன்று தீபிகா தன்னுடைய கணவனுக்காக விரதம் இருந்துள்ளார். அன்றைய தினம் இரவு, கணவருக்கு அதேபகுதியில் திருமணமான வேறு பெண்ணுடன் இருக்கும் தொடர்பு பற்றி தீபிகா கேட்டறிந்துள்ளார்.இதனால இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விக்ரம் 8 வது மாடியின் பால்கனியில் இருந்து தீபிகாவை தள்ளிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த தீபிகாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிலே தீபிகா சிகிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து தகவலறிந்த தீபிகாவின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் பொலிஸார் கொலை வழக்கு பதிவு செய்து விக்ரமை கைது செய்துள்ளனர். கணவனுக்காக விரதம் இருந்த அப்பெண்ணிற்கு இப்படி ஒரு முடிவு ஏற்பட்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*