கணவர் வெளிநாட்டில் இருந்த நிலையில் மனைவியின் மோசமான பழக்கத்தால் நடந்த அதிர்ச்சி சம்பவம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அம்பேத்கார் நகரை சேர்ந்த ராஜேஸ்குமார் சவூதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லோகேஸ்வரி ரோஸ் காட்டேஜ் பகுதியில் உள்ள வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு நேற்று பிணமாக மீட்டப்பட்டுள்ளனர்.3 வயது மகன் கார்த்திகேயன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்து வந்த போலீசார் 24 மணி நேரத்திலேயே கொலையாளியை கைது செய்துள்ளனர்.கொலை சம்பவம் குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது.இந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கமெராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம்.

லோகேஸ்வரியை கொலை செய்த மர்ம ஆசாமிகளை பிடிக்க எனது தலைமையிலான 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. பணம் மற்றும் நகைக்காக கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.இந்நிலையில் கொலைக்கான காரணம் குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கவுரி சங்கர் என்பவர் ஈரோட்டில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார்.அந்த கம்பெனியில் தயாரிக்கப்படும், மூலிகை பொருட்களை லோகேஸ்வரி வாங்கி விற்பனை செய்துள்ளார்.

இதனால், இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது, அவர் அடிக்கடி லோகேஸ்வரி வீட்டில் வந்து, தங்கி சென்றார். வேறு நபருடன் லோகேஸ்வரிக்கு தொடர்பு இருப்பதாக கூறி, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.ஆத்திரமடைந்த கவுரிசங்கர், கத்திரிகோலால் லோகேஸ்வரியின் கழுத்தை அறுத்துள்ளார்.

குழந்தை பக்கத்தில் இருந்த போது, அவன் கழுத்தையும் அறுத்துவிட்டு தப்பித்து சென்றுள்ளார்.அப்பகுதியில் உள்ள, சிசிடிவி கமெராவில் கவுரிசங்கர் வந்தது பதிவாகி உள்ளது. இதனையடுத்து சம்பவம் நடந்த 24 மணிநேரத்தில் கவுரிசங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*