
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஹட்சன் ஆற்றில் இருந்து ஒன்றாக பிணைக்கப்பட்ட நிலையில் மீட்க்கப்பட்ட இளம்பெண்கள் தொடர்பில் பொலிசார் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர்.சவுதி அரேபியாவை சேர்ந்த சகோதரிகள் Rotana Farea (22) and Tala Farea (16) ஆகிய இருவரது சடலங்களும் கடந்த அக்டோபர் 24 ஆம் திகதி ஹட்சன் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது.வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள ஃபேர்ஃபாக்ஸ் பகுதியில் இருந்து இவர்கள் 2 மாதங்களுக்கு முன்னர் மாயமானதாக குடும்பத்தாரால் பொலிசாருக்கு புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள பொலிசார், குறித்த சகோதரிகள் இருவரையும் கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இந்த வழக்கில் போதிய ஆதாரங்களை தேடி வருவதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்ஆனால் சகோதரிகள் இருவரும் முகத்தோடு முகம் பார்க்கும்வகையில் ஒன்றாக பிணைத்து இடையிலும் பாதத்திலும் கட்டியுள்ளனர். மேலும் முழு ஆடையுடன் காணப்படும் இருவரும் தாக்கப்பட்டதற்கான எந்த அறிகுறியும் காணப்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.மட்டுமின்றி சகோதரிகள் இருவரும் செப்டம்பர் முதல் திகதி நியூயார்க் செல்லும் முன்னர் வாஷிங்டனுக்கும் பிலாடெல்பியாவுக்கும் சென்றுள்ளனர் எனவும், நியூயார்க்கில் பிரபல ஹொட்டல்களில் தங்கியுள்ளதாகவும் பொலிசார் கண்டறிந்துள்ளனர்.
நுரையீரலில் தண்ணீர் புகுந்திருப்பதால் சகோதரிகள் இருவரும் உயிருடனே ஆற்றில் குதித்திருக்கலாம் எனவும் பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.மேலும், இருவரும் அமெரிக்க அரசிடம் புகலிடம் கோரியுள்ளதாகவும், இதனால் அவர்களது பெற்றோர் அமெரிக்கா விட்டு வெளியேற வேண்டும் என அமெரிக்காவில் உள்ள சவுதி தூதரகத்தில் இருந்து தொலைபேசியில் ஒருவர் பேசியதாகவும்.
மரணமடைந்த இளம்பெண்களின் பெற்றோர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.சவுதி அரேபியாவுக்கு அனுப்ப அவர்களது பெற்றோர் நிர்பந்திப்பதால் இருவரும் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
Leave a Reply